5,275 விஜய் மல்லையாக்கள் ஏப்பம் விட்ட தொகை ரூ.56,521 கோடி

புது­டெல்லி: இந்­தி­யா­வில் ஏராளமான சொத்­துகள் இருந்­தும் வங்கிக் கடனைத் திருப்பி செலுத்­தா­மல் இருக்­கும் விஜய் மல்லை­யாக்­களின் எண்­ணிக்கை 5,275 என்றும் அவர்­கள் ஏப்பம் விட்­டி­ருக்­கும் தொகை மொத்தம் ரூ.56,521 கோடி என்றும் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. வங்­கி­யில் ரூ.7,000 கோடி கடன் வாங்கி ஏமாற்­றி­விட்­ட­தாக விஜய் மல்லை­யாவை பற்றி செய்­தி­கள் வெளியாகிக் கொண்­டி­ருக்­கும் வேளையில், இந்­தி­யா­வில் கணக்கே இல்லாமல் சொத்­துகள் இருந்­தும் வாங்கிய வங்­கி­க் கடனைத் திருப்பி செலுத்த விரும்பாத பணக்காரர் கள் மொத்தம் 5,275 பேர் என்­கிறது அந்தப் புள்ளி விவரம்.

நிலுவைத் தொகைகள் குறித்த துல்லியமான புள்ளி விவ­ரங்களைப் பதிவு செய்து வரும் சிபில் அமைப்பு, வங்­கிகளில் கடன்களைத் திரும்ப செலுத்­தத் தவ­றி­ய­வர்­களின் பட்­டி­யலை வெளி­யிட்­டுள்­ளது. அதில், இந்திய வங்­கிகளில் கடன் பெற்று திருப்­பிச் செலுத்­தா­மல் ஏமாற்­றி­யோர் எண்­ணிக்கை கடந்த 13 ஆண்­டு­களில் 9 மடங்கு அதி­க­ரித்­தி­ருப்­ப­தும் அவர்­கள் செலுத்த வேண்டிய தொகை­யா­னது மத்திய அரசு 2016=17ஆம் ஆண்­டுக்­கான நிதிநிலை அறிக்கை­யில் ஒட்­டு­ மொத்த வேளாண் துறைக்கு ஒதுக்­கிய ரூ.35,894 கோடியை விட 1.5 மடங்கு அதிகம் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்தக் கடன்கா­ரர்­கள் அனை­வ­ரும் வங்­கி­யில் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்­தும் சக்தி இருந்­தும் கடனைத் திருப்பி செலுத்­தா­மல் இருப்­ப­வர்­க­ளாக வங்கி அறி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!