இந்தியா ராணுவத்துக்கு ரூ. 15,000 கோடி மேம்பாட்டு நிதி

ரூர்க்கி: 'இந்­தி­யா­வில் தயா­ரிப்­போம்' இயக்­கத்­தின் இலக்கு முக்­கி­யம் என்ற போதிலும் ராணு­வத்­தின் தயார் நிலைக்­கு­தான் எப்­போ­தும் முன்­னு­ரிமை என்று இந்திய தற்­காப்பு அமைச்­சர் மனோகர் பரிக்­கர் கூறி­யுள்­ளார். ரூர்க்­கி­யில் உள்ள ஐஐடி மூன்று நாள் தொழில்­நுட்ப விழாவின் தொடக்க நாள் அன்று பேசிய அமைச்­சர், "போதிய கரு­வி­கள் நமக்­குத் தேவை. அதை நாம் மாற்­ற­மு­டி­யாது. 'இந்­தி­யா­வில் தயா­ரிப்­போம்' இயக்­கத்­தின் இலக்கு முக்­கி­யம் என்றா­லும் ராணு­வத்­தின் தயார் நிலைதான் எப்­போ­துமே முன்­னு­ரிமை பெறும். ஏனெனில், ராணு­வத்­தின் முதல் பணியே அதுதான். அச்­சு­றுத்­தும் பார்வை­யு­டன் அண்டை நாடுகள் நம்மை பார்க்­கக்­கூ­டாது," என்று கூறினார். தற்­காப்­புத் துறையின் 'இந்­தி­யா­வில் தயா­ரிப்­போம்' முயற்சி குறித்த கலந்­துரை­யா­ட­லில் பரிக்­கர் பங்­கேற்­றார்.

இதற்கிடையே, ராணுவத்தின் மேம்பாட்டுக்காக மொத்தம் ரூ. 15,000 கோடி நிதி ஒதுக்கப் பட்டு உள்ளது. 1.18 மில்லியன் பேரைக் கொண்ட இந்திய ராணுவம் பல பிரிவுகளில் செயல் முறை, உள்கட்டுமானக் குறை பாடுகளுடன் திணறி வருகிறது. இந்நிலையில் ஏவுகணை, வெப்ப நுண்ணுணர் கருவிகள், ஆயுதங்களைக் கண்டறியும் ராடார்கள், பல ஏவுகணைகளைச் செலுத்தும் கருவிகள் உள்ளிட்ட வற்றை வாங்க ராணுவத்துக்கு நிதி ஒதுக்கப்படவுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!