ரூ.70 லட்சம் செலவில் மனைவிக்குக் கோவில்

நகரி: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்­டம் ராஜம்­பேட்டையைச் சேர்ந்த­வர் முனிராமையா திரு­மலை­யில் காவல்­துறை துணைக் கண்­கா­ணிப்­பா­ளராக உள்ளார். அவரது மனைவி ஸ்ரீவானி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மரணமடைந்தார். மனைவி மீது பாசம் கொண்ட முனி ராமையா அவரது நினைவாகக் கோயில் கட்ட முடிவு செய்து சொந்த ஊரான ராஜம்­பேட்டை­யில் ரூ.40 லட்சம் மதிப்­பி­லான 14 செண்ட் நிலத்­தில் ரூ.36 லட்சம் செலவில் முற்­றி­லும் பளிங்குக் கற்­க­ளால் மிக நேர்த்­தி­யான அழகிய கோயில் கட்­டினார். கோயி­லுக்­குள் மனை­வி­யின் உரு­வச்­சிலை வைக்­கப்­பட்டு தின மும் பூசை செய்­வதற்­காக பூசா­ரியை­யும் பணி­ய­மர்த்தியுள்ளார்.

மேலும், மனைவி பெயரில் அறக்­கட்­டளைத் தொடங்கி சமூகப் பணி­களைச் செய்து வரு­கிறார். அது­பற்றி முனி­ராமையா கூறுகையில், ''எனது மனை­வி­யின் முயற்­சி­யால்­தான் இன்று நான் காவல்­துறை துணைக் கண்­கா­ணிப்­பா­ளர்­யாகி இருக்கிறேன்'' என்று நெகிழ்ந்து கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!