மதுரை நகரில் கடந்த நான்கு நாட்களாக வெடிகுண்டு பதற்றம் நீடிக்கிறது. கடந்த சனிக்கிழமை பின்னிரவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. அச்சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரத்தில் மதுரை பனகல் ரோட்டில் அரசு பொது மருத்துவ மனை அருகே உள்ள அதிமுக அலுவலகத்தின் மீதும் பெட்ரோல் குண்டுகளும் நாட்டு வெடிகுண்டு களும் வீசப்பட்டன.
நள்ளிரவுக்குப் பிந்திய நேரம் என்பதால் இந்த இரு அலுவலகங் களிலும் ஆட்கள் இல்லை. எனவே, குண்டு வீச்சுச் சம்பவங் களால் கட்டடங்களுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டது. இருப்பினும் அதிமுக அமைச்சர், அதிமுக அலுவலகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் இதில் அரசியல் பகை இருப்பதாக போலிசார் சந்தேகித்தனர். வெடிகுண்டுகள் நிகழ்ந்த கட் டடத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜுவும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.