தஞ்சோங் பகாரில் அமரர் லீக்கு 1,500க்கும் அதிகமானோர் நினைவஞ்சலி

அமரர் திரு லீ குவான் இயூவின் முதல் ஆண்டு நினைவஞ்சலியை அணுசரிக்க கடந்த சில வாரங்களாக பல்வேறு சமூக, சமய, அரசியல் அமைப்புகள் பல்வேறு இடங்களில் நிகழ்ச் சிகளை ஏற்பாடு செய்து வருகின்றன. எனினும் தஞ்சோங் பகார் வட்டாரம் திரு லீக்கு மிகவும் நெருக்கமான இடம். தனது அரசியல் பயணத்தைத் தொடங் கிய இடம் அது. தஞ்சோங் பகார் வட்டாரத்தில் நேற்று அமரர் லீ குவான் இயூவின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியை அணுசரிக்க 1,500க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டனர்.

தஞ்சோங் பகார் குழுத் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுங் சிங், சட்ட, நிதி மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா, டாக்டர் சியா ‌ஷி லு, திரு மெல்வின் யோங், திருமதி ஜோன் பெரேரா ஆகியோரும் ரடின் மாஸ் தனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மனிதவள துணை அமைச்சருமான சேம் டான், முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர்கள், அடித்தள அமைப்புத் தலைவர்கள் ஆகியோரும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

திரு லீ குவான் இயூ, அவரது மனைவி குவா கியோக் சூ பெயர்களில் உருவாக்கப்பட்ட 'ஹைப்ரிட்' ரக ஆர்க்கெட் மலர்கள் அருகருகே உள்ளதைச் சித்திரிக்கும் மண்பாண்ட ஓவியம் ஒன்று தஞ்சோங் பகார் பிளாசாவில் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது. மேலும் அவ்வட்டாரத்தில் ஏழு 'மெம்பாட்' மரங்களையும் குடி யிருப்பாளர்கள் நட்டனர். இந்த வகை மரத்தை முதன் முதலில் 1963ஆம் ஆண்டு அவ்வட்டாரத் தில் நட்டு தேசிய மரம் நடும் இயக்கத்தைத் தொடங்கி வைத் தார் திரு லீ.

அமரர் திரு லீ குவான் இயூ, அவரது மனைவி குவா கியோக் சூ பெயர்களில் உருவாக்கப்பட்ட 'ஹைப்ரிட்' ஆர்க்கெட் மலர்கள் அருகருகே உள்ளது போன்ற மண்பாண்ட ஓவியத்தை தஞ்சோங் பகார் தொகுதியில் அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரபூர்வமாக நேற்று திறந்து வைத்தனர். இந்த ஓவியம் தஞ்சோங் பகார் சமூக மன்றத்தின் மண்பாண்ட கலைக் குழு கைவண்ணத்தில் உருவானது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!