இந்திய வர்த்தக தலைவர்களுக்கு விருது

வில்சன் சைலஸ்

சிங்கப்பூரின் பொருளியலுக்குப் பங்களித்து வரும் உள்ளூர் இந்திய வர்த்தக தலைவர்களுக்கு நேற்று விருதுகள் வழங்கி கௌர வித்தது சிங்கப்பூர் இந்தியர் வர்த்தகத் தொழிற்சபை. பல ஆண்டுகளாக அயராது உழைத்து சமூகத்திற்கு பல்வேறு வகையில் சேவையாற்றியுள்ள வர்த்தக தலைவர்களுக்கு இது போன்ற ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியை சபை ஏற்பாடு செய் வது இதுவே முதன்முறை. ரிட்ஸ் கார்ல்டனில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மொத்தம் 90 இந்திய வர்த்தக தலைவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

ஆண்டுக்கு ஏறக்குறைய ஒரு மில்லியன் வெள்ளி வரை வரு மானம் ஈட்டுவதுடன் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நன்மதிப்புடன் தங்கள் வர்த்தகங் களைச் செயல்படுத்தும் 100க்கும் மேற்பட்ட தொழில்முனைவர்கள் பொதுமக்களால் இந்த விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களுள் தேர்ந்தெடுக்கப் பட்ட 90 வர்த்தக தலைவர்களுக்கு கட்டுமானம், உணவு-பானம், ஆபரணங்கள் செய்தல், நில வனப்பு, அச்சகம் ஆகிய ஐந்து துறைகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்விருது வழங்கும் நிகழ்ச்சியில் வர்த்தக தொழில் (தொழில்) அமைச்சர் எஸ் ஈஸ்வரன் சிறப்பு விருந் தினராக கலந்துகொண்டார். "சிங்கப்பூரில் அடுத்த தலை முறை தொழில்முனைவர்களை உருவாக்குவதில் தொழிற்சபையும் இந்திய வர்த்தக தலைவர்களும் சிறந்த வகையில் பங்காற்ற முடியும்," என்றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!