மறதி நோயாளிகளுக்கு உதவும் ஹோங் கா நார்த்

கடந்த ஓராண்டுகாலமாக ஹோங் கா நார்த் தொண்டூழியர் களும் கடைக்காரர்களும் சிறப்புப் பயிற்சி பெற்று வந்துள்ளனர். இதன் காரணமாக, மறதி நோயாளிகளை அடையாளம் கண்டுபிடித்து அவர்கள் உதவ முடியும். இதனால் ஹோங் கா நார்த் வட்டாரமும் மறதி நோயாளி களுக்கு உகந்த சிங்கப்பூரின் 2வது சமூகமாக நேற்று அறி விக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். மறதி நோயாளிகளுக்கு உகந்த சிங்கப்பூரின் முதல் சமூக மாக சொங் பாங் திகழ்கிறது.

கூ டெக் புவாட் மருத்துவ மனையும் லியன் அறநிறுவனமும் 'ஏஜென்சி ஃபார் இன்டக்ரேட்டட் கேர்' என்ற அமைப்புடன் சேர்ந்து அந்த முன்னோடித் திட்டத்தை சொங் பாங்கில் அறிமுகப்படுத் தியது. இந்த இரண்டு சமூகத்திலும் உள்ள தொண்டூழியர்களுக்கு மறதி நோயாளிகளை அறிகுறிகள் மூலம் அடையாளம் காணும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. எந்தவித குறிக்கோளும் இல் லாமல் அலைந்து கொண் டிருப்பது போன்றவை மறதி நோயாளிகளுக்கான அறிகுறி களில் சில. இந்த வகையில் பயிற்சி பெற்ற தொண்டூழியர்கள் 'மறதி நோயாளிகளின் தோழர்கள்' என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களில் குடியிருப் பாளர்கள், வர்த்தக உரிமை யாளர்கள் போன்றவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

ஹோங் கா நார்த்தில் மட்டும் 139 'மறதி நோயாளிகளின் தோழர்கள்' உள்ளனர். இது தவிர, ஹோங் கா நார்த்தில் ஐந்து முனையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மறதி நோயாளி களைச் சந்திக்கும் நபர்கள் அவர்களை முனையங்களுக்கு அழைத்துவந்து பராமரிப்பாளர் களுடன் தொடர்பு கொள்ளச் செய்ய முடியும். சமூக மன்றம் போன்ற இடங் களில் இந்த முனையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சொங் பாங், ஹோங் கா நார்த் வரிசையில் பிடோக், மெக்ஃபர்சன், குவீன்ஸ்டவுன் உள்ளிட்ட வட்டாரங்களும் அடுத்ததாக மறதி நோயாளி களுக்கு உகந்த சமூகமாக மாற விருக்கின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!