சுவா சூ காங் சமூக மன்றத்தில் செய்முறையுடன் தகவல் தொழில்நுட்பப் பயிற்சி வகுப்புகள்

சுவா சூ காங் குடியிருப்பாளர்கள் இனி தகவல் தொழில்நுட்பத் துறையில் செய்முறைகளுடன் பயிற்சி வகுப்புகளில் சேர முடியும். அந்த வட்டாரத்தில் மேம்படுத்தப்பட்ட சமூக மன்றம் இதனை சாத்தியமாக்கியிருக் கிறது. டெக் வை அவென்யூவில் புதிய தோற்றத்துடன் வீற்றிருக்கும் சுவா சூ காங் சமூக மன்றத்தை சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார். புதிய வன்பொருளுடன் புதுப்பிக்கப்பட்ட மென்பொருளுடன் புத்துயிர் பெற்ற தகவல் தொழில்நுட்ப நிலையமும் அங்கு இடம்பெற்றுள்ள பலதரப்பட்ட வசதிகளில் ஒன்று. சிங்கப்பூரை ஓர் அறிவார்ந்த தேசமாக்கும் முயற்சிகளுக்கு ஏற்ப இந்த ஐடி நிலையமும் அமைக்கப் பட்டுள்ளது.

'ஸ்கில்ஸ்ஃயூச்சர்' பயிற்சி உதவி நிதியுடன் முப்பரிமாண அச்சு, 'எச்டிஎம்எல்', சி-புரோகிரா மிங், கைபேசி செயலி உருவாக்குதல் உள்ளிட்ட பல தகவல் தொழில்நுட்பப் பயிற்சிகளை செய் முறையுடன் குடியிருப்பாளர்கள் இந்த நிலையத்திலிருந்து கற்றுக்கொள்ள முடியும். விழாவில் பேசிய சுவா சூ காங் குழுத் தொகுதியின் நாடாளு மன்ற உறுப்பினருமான திரு கான் கிம் யோங், "குடியிருப்பாளர் களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கும் வகையில் இவ்வாண்டு இறுதியில் மேலும் 'ஸ்கில்ஸ் ஃபியூச்சர்' வகுப்புகளும் வசதிகளும் சேர்க்கப்படும்," என்றார். சமூகத்தில் தகவல் தொழில் நுட்பத்தை பரவலாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 1998ல் சுவா சூ காங் மன்றத்தில் 'ஐடி' நிலையம் தொடங்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!