அமரர் லீ குவான் இயூ சொல்லரங்கம்

பெக் கியோ சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­கு­ழு­வும் சிங்கப்­பூர்த் தமிழ் எழுத்­தாளர் கழ­க­மும் இணைந்து அமரர் லீ குவான் இயூவின் முதலாம் ஆண்டு நினை­வஞ்ச­லிக்கு ஏற்பாடு செய்­துள்­ளன. அடுத்த ஞாயிறு 27.3.2016 மாலை மணி 6.30க்கு "சொல்­ல­ரங்கம்" எனும் தலைப்­பில் அந்த நினை­வஞ்சலி பெக் கியோ சமூக மன்றத்­தில் நடை­பெ­றும்.

"திரு. லீ குவான் இயூ மாபெரும் தலை­வ­ரா­கக் கரு­தப்­படு­வதற்­குப் பெரிதும் கார­ண­மான பண்பு எது?" எனும் தலைப்­பில் சொல்­ல­ரங்கம் இடம்­பெ­றும். அதற்­குக் காரணம் அவரது "தொலை­நோக்கு" என்று விஜி ஜெகதீஷ், "நேர்மை" என்று மு.சேவகன், "திறமையை மதித்­தல்" என்று சுப. அரு­ணா­ச­லம், "சமத்­து­வம்" என்று பிச்­சி­னிக்­காடு இளங்கோ ஆகியோர் பேசுவர். "அர­ச­தந்­தி­ரம்"தான் காரணம் என்று முனைவர் சரோஜினி செல்­லக்­கி­ருஷ்­ணன், "துணிவு" என்று முனைவர் செல்­லக்­கி­ருஷ்­ணன், "உழைப்பு" என்று முனைவர் ஜி. ராஜ­கோ­பா­லன், "ஊழ­லின்மை" என்று முனைவர் இரத்­தின வேங்க­டே­சன் ஆகியோர் பேசுவர்.

எழுத்­தா­ளர் கழகத் தலைவர் நா. ஆண்­டி­யப்­பன் தலைமை­யில் நடை­பெ­றும் இந்­நி­கழ்­வுக்கு, தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் அடித்­தள ஆலோ­ச­க­ரு­மான திரு. மெல்வின் யோங் சிறப்பு வருகை புரிவார். நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு மறைந்த மாபெரும் தலை­வ­ருக்கு அஞ்சலி செலுத்த பெக் கியோ சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­கு­ழு­வும் எழுத்­தா­ளர் கழ­க­மும் அனை­வரை­யும் அழைக்­கின்றன.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!