பரதம், ‘பாலே’யுடன் பட்டயக் கல்வி

சுதாஸகி ராமன்

ஐந்து வயதிலிருந்து பர­த­நாட்­டி­யக் கலையைக் கற்­றுக்­கொள்­ளத் தொடங்­கிய சுருதி நாயர், 18, நட­னத்­தின்மீது கொண்ட விருப்­பத்­தின் கார­ண­மாக சிங்கப்­பூர் கலைப் பள்­ளி­யில் சேர்ந்தார். அங்கு 'இண்டர்­நே­ஷ­னல் பேக்­க­ல­ரேட் (ஐபி)' பட்­ட­யக் கல்­வியில் நட­னத்தை சிறப்­புத் தெரிவுப் பாடமாகப் பயின்றார். பள்­ளி­யில் 'பாலே', 'கான் டெம்­பொ­ரெரி', 'ஜாஸ்' போன்ற மேற்­கத்­திய நட­னங்களு­டன் சீன, மலாய் நட­னங்களை­யும் கற்­றுக்­கொண்ட அவர், படிப்­பி­லும் அதே அளவு அக்கறை செலுத்தி 'ஐபி' பாடத்திட்டத்தின் இறுதியாண்டுத் தேர்­வு­களில் ஒருவர் பெறக்­கூ­டிய அதி­க­பட்ச புள்­ளி­க­ளான 45க்கு 37 புள்­ளி­களைப் பெற்­றுள்­ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற 'ஐபி' தேர்­வு­களில் நட­னத்­து­டன் சேர்த்து எட்டு பாடங்களில் சிறந்த தேர்ச்சி பெற்ற ஸ்ருதி, சிங்கப்­பூர் தேசியப் பல்­கலைக்­ க­ழ­கத்­தில் சமுதாய, கலாசார மானி­ட­வி­யல் துறையில் பயிலத் திட்­ட­மிட்டுள்­ளார். தமது உணர்ச்­சி­களைத் துணிச்­ச­லாக வெளிப்­படுத்­தும் தளமாக நட­னத்தைக் கருதும் ஸ்ருதி, "நட­னத்­தில் மேலும் பல­வற்றைக் கற்­றுக்­கொண்டு, இன்னும் சிறப்­பா­கப் பயிற்சி பெற்று திறன்களை வளர்த்­துக்­கொண்ட பிறகே நடனத் துறையில் சாதிக்க ஆசைப்­படு­கி­றேன்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!