விஜய் சேதுபதியைப் பார்த்து பொருமும் நாயகர்கள்

வெய்யில் சுட்­டெ­ரிக்­கும் இந்தக் காலக்­கட்­டத்­தில் விஜய் சேது­ப­திக்கு மட்டும் அடைமழை பெய்து அவரைக் குளிர வைத்­துக்­கொண்­டி­ருக்­கிறது. படத்­திற்­குப் படம் அவர் வெற்றி வாகையைச் சூடி வரு­வதைப் பார்த்து வளர்ந்து வரும் நாய­கர்­கள் பொறாமை­யில் பெரு­மூச்சு விடு­கிறார்­கள். விக்னேஷ் சிவன் இயக்­கத்­தில் விஜய் சேதுபதி, நயன்­தாரா நடித்த படம் 'நானும் ரவு­டி­தான்'. இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனால் அதே கூட்­ட­ணியை வைத்துத் தனது அடுத்த படத்தை இயக்­கு­வதற்­கான வேலை­களைத் தொடங்­கி­யி­ருக்­கிறார் விக்னேஷ் சிவன். அதோடு, புதிய படம் இரண்டு கதா­நா­ய­கிகளைக் கொண்ட கதை என்­ப­தால் இதுவரை இணைந்து நடிக்­காத திரிஷா, நயன்­தாரா ஆகிய இரு­வரை­யும் அந்தப் படத்­தில் இணைக்க முயற்சி எடுத்­தார் விக்னேஷ் சிவன்.

ஆனால், அது­கு­றித்­துத் திரிஷாவை அவர் அணு­கி­ய­போது, கதையைக்­கூ­டக் கேட்­கா­மல் தான் பல படங்களில் நடிக்க ஒப்­பந்தம் ஆகி இருப்­ப­தால் நாட்கள் ஒதுக்­க­மு­டி­யாது என்று சொல்லி நழுவி விட்­டா­ராம். அதனால் வேறு சில முன்னணி நடிகை­களி­டம் தேதிகள் கேட்டு வந்த அவர், தற்­பொ­ழுது ஏமி ஜாக்சனை ஒப்­பந்தம் செய்­தி­ருப்­ப­தா­கத் தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. ஆக, ஆரம்பத்­தில் பிர­ப­ல­மில்­லாத கதா­நா­ய­கிகளு­டன் நடித்து வந்த விஜய் சேதுபதி, 'நானும் ரவு­டி­தான்' படத்­தில் நயன்­தா­ரா­வு­டன் நடித்த பிறகு 'தர்­ம­துரை'யில் தமன்னா­வு­டன் நடித்­தி­ருக்­கிறார். தற்போது 'ஆண்ட­வன் கட்டளை'யில் ரித்திகா சிங்­கு­டன் நடித்து வரு­கிறார். அவரைத் தொடர்ந்து ஏமி ஜாக்­ச­னு­ட­னும் நடிக்­கப்­போ­கிறார். இதேபோல் அவரது புதிய படங்களி­லும் புகழ்­பெற்ற கதா­நா­ய­கிக­ளாக ஒப்­பந்தம் செய்­யப்­பட்டு வரு­கின்ற­னர். நயன்­தா­ரா­வு­டன் நடிக்­க­மாட்­டோமா என்று ஏங்­கிக்­கொண்டு இருக்­கும் வளர்ந்து வரும் நடி­கர்­கள் இரண்டு முன்னணி நடிகை­களு­டன் நடிக்க இருக்­கும் விஜய் சேது­ப­திக்கு அடித்த யோகத்தை நினைத்து பெரு­மூச்சு விட்டு கோடம்பாக்­கத்தை இன்னும் அதிக சூடாக்­கிக்­கொண்டு இருக்­ கிறார்­க­ளாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!