மோடி அலை என்பதெல்லாம் முன்பே முடிந்துபோன கதை என்கிறார் நாராயணசாமி

புதுவை: மோடி அலை என்பது முடிந்துபோன கதை என்கிறார் முன் னாள் மத்திய அமைச்சர் நாராயண சாமி. விரைவில் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர் தல்களில் மோடி அலை என்பது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று புதுவையில் அவர் செய்தியாளர் களிடம் கூறினார். "இப்போது நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் அலை என்பது ஒரு விழுக்காடு கூட இல்லை. மோடி அரசை மக்கள் தூக்கி எறியத் தயாராகிவிட்டனர். தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் மோடி அலை எடுபடாது," என்றார் நாராயணசாமி.

புதுவையைப் பொறுத்தவரையில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் கூடா ரம் காலியாகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் இரண்டாம் நிலை தலைவர்களும் ரங்கசாமி மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறினார். புதுவை சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக இருப்பதாகக் கூறிய அவர், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய காங்கிரஸ் தலைவி சோனியாவும் ராகுல் காந்தியும் புதுவை வர வாய்ப்பு உள்ளது என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!