அமரர் லீயின் கொள்கைகளைப் பறைசாற்றிய நிகழ்வுகள்

செம்பவாங் குழுத் தொகுதி: சிங் கப்பூரின் முதல் பிரதமர் அமரர் திரு லீ குவான் இயூவின் கொள் கைகளையும் நோக்கங்களையும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் குடும்ப விழா நேற்று செம் பவாங் பகுதியில் நடைபெற்றது. "சிங்கப்பூரை வடிவமைத்த பண்புநெறிகள்" எனும் தலைப்பிலான இந்நிகழ்ச்சியில் விடா முயற்சி, சமூக ஒற்றுமை, இன நல்லிணக்கம், ஆரோக்கிய வாழ்க்கைமுறை, குடும்ப வாழ்க் கை போன்ற பண்புகளை மையமா கக் கொண்டு அங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான், இதர செம்பவாங் குழுத் தொகுதி நாடா ளுமன்ற உறுப்பினர்களான அம் ரின் அமின், டாக்டர் லிம் வீ கியாக், விக்ரம் நாயர் ஆகியோர் பங்கேற்றனர். செம்பவாங் சமூக மன்றத்தி லிருந்து செம்பவாங் பூங்கா வரை யிலான துரித நடையில் பல இனங்களைச் சேர்ந்த 60 குடும் பங்கள் பங்கேற்றன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் பண்புநெறி வார்த்தைகள் பொறிக்கப்பட்ட கொடி கொடுக்கப்பட்டது. அதை அவர்கள் ஏந்தி நடந்து செல்லும் போது மற்ற குடும்பங்களுடன் பேசிக் கொண்டே நடந்தார்கள்.

அவ்வாறு 60 பண்புநெறி ஒட்டுவில்லைகளைத் துரித நடை முடிவுற்ற செம்பவாங் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த சிங்கப்பூரின் வரைபடம் கொண்ட பெரிய பல கையில் அந்தக் குடும்பங்கள் ஒட்டின. மேலும் அங்கு நடந்த புகைப் படக் கண்காட்சியில் அமரர் லீயின் புகைப்படங்களுடன் அவ ரது பொன்மொழிகளும் இடம் பெற்றிருந்தன. "சிங்கப்பூரை வடிவமைத்த பண்புநெறிகள்" எனும் வாசகத்துக்கு மேல் உள்ள சிங்கப்பூர் வரைபடத்தில் பண்புநெறி வில்லைகள் ஒட்டப்பட்டன. அந்தப் பண்புநெறிகளைக் கட்டிக்காப்போம் என்று அனைவரும் கையை உயர்த்தி உறுதி தெரிவித்தனர். படம்: கோ பூன் வான் ஃபேஸ்புக்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!