4,877 அழிப்பான்களுடன் உருவாகிய அமரர் லீயின் உருவம்

சிங்கப்பூரின் முதல் பிரதமர் அம ரர் லீ குவான் இயூவின் உரு வத்தை சிங்கப்பூர் கொடி வரையப் பட்ட 4,877 அழிப்பான்களைக் கொண்டு சுமார் 100 இளையர்கள் உருவாக்கியுள்ளனர். சமர்சட் ரோட்டில் உள்ள 'த ரெட் பாக்ஸ்' கட்டடத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் அமரர் லீயின் இளைய சகோதரரான 82 வயது டாக்டர் லீ சுவான் இயூ. 'நமது தந்தை, நமது நாடு, நமது கொடி' எனும் தலைப்பு கொண்ட இந்த யோசனையை முன்வைத்தார் பழைய பள்ளி சிற்றுண்டிகளையும் விளையாட்டுப் பொருட்களையும் விற்பனை செய் யும் 'மஞ்ச் மஞ்ச்' நிறுவனத்தின் உரிமையாளர் திரு ரக்ரிப் ஹமிட்.

அழிப்பான்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கலைப் படைப் புக்கு டாக்டர் லீ, அவரது குடும் பத்தினர், தேசிய இளையர் மன் றத்தின் தலைமை நிர்வாகி திரு டேவிட் சுவா, இளையர் படையின் நிர்வாக இயக்குநர் திரு ஓங் கா குவாங் ஆகியோர் இறுதி வடிவம் கொடுத்தனர். டாக்டர் லீ பேசுகையில், "என் அண்ணனின் நினைவாக சிங்கப் பூர் இளையர்கள் ஒன்றுசேர்ந்து இந்தக் கலைப்படைப்பைப் படைத் ததில் பெருமை கொள்கிறேன்," என்றார். இந்தப் படைப்பு இம்மாதம் 21 முதல் 27ஆம் தேதி வரை 'த ரெட் பாக்ஸ்' கட்டடத்தில் வைக் கப்பட்டிருக்கும்.

'எங்கள் தந்தை, எங்கள் நாடு, எங்கள் கொடி' எனும் தலைப்பு கொண்ட கலைப் படைப்பு நிகழ்வில் நேற்று பங்கேற்ற அமரர் திரு லீ குவான் இயூவின் இளைய சகோதரர் டாக்டர் லீ சுவான் இயூ உரையாற்றுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!