தோற்றதால் பாகிஸ்தான் ரசிகர்கள் ரகளை

கராச்சி: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ் தானுக்கு எதிராக இந்தியாவின் சாதனை தொடர்கிறது. 50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 6 முறை வென்று இருக்கிறது. ஒரு முறை கூடத் தோற்றது இல்லை. 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியிலும் இதே நிலைதான். ஏற்கெனவே 4 ஆட்டங்களில் வென்று இருந்தது. நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்திலும் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இதன்மூலம் ஒட்டுமொத்த உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா 11-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

பாகிஸ்தான் தோற்றதால் அந்நாட்டு ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். கராச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். தொலைக்காட்சிப் பெட்டி களை நடுரோட்டில் கொண்டு வந்து கீழே போட்டு உடைத்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் தங்கள் நாட்டு வீரர்களுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.

இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் அந்நாட்டு ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். கராச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள் தொலைக்காட்சிப் பெட்டியை உடைத்தனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!