‘2.0’ படத்துக்கு ரூ. 330 கோடிக்கு காப்பீடு

அமீர்கானை முறியடித்த ரஜினிகாந்த் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்துக்கு ரூ. 330 கோடிக்கு காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது. இது இந்திய அளவில் ஒரு சாதனையாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு அமீர் கானின் 'பிகே' படம் ரூ.300 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டது. அந்தச் சாதனையை ரஜினி படம் முறியடித்துள்ளது. '2.0' படம், இது 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது. 'எந்திரன்' என்ற தலைப்பை அதை முதலில் தயாரித்த நிறுவனம் அளிக்க மறுத்துவிட்டதாலேயே இந்தப் படத்திற்கு '2.0' என்று பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினி, அக் ஷய் குமார், ஏமி ஜாக்ஸன், ஷங்கர் ஆகிய நான்கு பேரின் சம்பளம் மட்டுமே மொத்தமாக ரூ. 150 கோடி வரை வருகிறதாம். தமிழில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ரூ. 330 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!