செய்தியாளர்களுக்கு வீட்டைக் காட்டிய பினாங்கு முதல்வர்

ஜார்ஜ் டவுன்: பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், சச்சரவில் சிக்கி யிருக்-கும் தனது 2.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வீட்டை நேற்று செய்தியாளர்-களுக்கு சுற்றிக் காட் டினார். ஜாலான் பின்-ஹோர்னில் 4,000 சதுர அடி பரப்பளவில் கட்டப் பட்டுள்ள அந்த பங்களாவுக்குள் நுழைய சுமார் 30 செய்தியாளர் களுக்கு அனுமதி வழங்கப் பட்டது. வீட்டின் வரவேற்பு அறை, உணவு அறை, சமையல் அறை உட்பட பல இடங்கள் செய்தியாளர் களுக்கு காண்பிக்கப்பட்டது. சந்தை விலையைவிட குறைவான விலைக்கு அந்தப் பங்களாவை லிம் குவான் எங் வாங்கியிருப்பதாக அம்னோ குற்றம் சாட்டியதால் பிரச்சினை வெடித்தது.

இந்த நிலையில் இது பற்றி நேற்று விளக்கம் அளித்த முதல் வர் லிம், 2012ஆம் ஆண்டிலேயே 2.8 மில்லியன் ரிங்கிட்டுக்கு பங்க ளாவை விற்க அதன் உரிமை யாளர் முன் வந்ததாகக் கூறினார். ஆனால் பொதுத்தேர்தலில் வெற்றிபெறுவது குறித்து உறுதி யாக தெரியாததால் அந்தப் பங்க ளாவை அப்போது வாங்கவில்லை என்றார் அவர். ஆனால் அதே விலையில் பங்களாவை விற்க உரிமையாளர் ஒப்புக் கொண்டதாக திரு லிம் சொன்னார்.

"வீட்டை வாங்கவும் தவணைத் தொகை கட்டவும் பணத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. தேர்தலில் வெற்றி பெற்ற சமயத்தில் போதுமான பணம் இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலையில் வீட்டை வாங்க முடிவு செய்தேன்," என்று அவர் தெரிவித்தார். "இதில் மறைப்பதற்கு ஒன்று மில்லை," என்றார் முதல்வர் லிம் குவான் எங்.

சந்தை விலைக்கும் குறைவாக பங்களாவை வாங்கியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், செய்தியாளர்களுக்கு வீட்டை சுற்றிக் காண்பித்தார். படத்தில் வரவேற்பு அறையில் தனது மனைவியுடன் லிம் அமர்ந்துள்ளார். படம்: த ஸ்டார்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!