கள்ளப் பணம்: அமைச்சர்களின் வீட்டைக் கண்காணிக்க உத்தரவு

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர் தல் ஆணையத்தின் சோதனைக ளில் பிடிபட்டுள்ள கள்ளப்பணம் கோடி கோடியாக அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ள ஐந்து மாநிலங்களிலும் ஆக அதிகமாக கள்ளப்பணம் பிடிபட்டுள்ளது தமிழ்நாட்டில் தான். வாகன சோதனைகள் மூலம் கிட்டத்தட்ட 14 கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டில் சிக்கியுள்ளது. கேரளாவில் நான்கு கோடி அள விலும் மேற்கு வங்கத்தில் 1.2 கோடி ரூபாயும் பிடிபட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதில் தமிழகம் முன் னணி இடத்தைப் பிடித்து வந்து உள்ளது.

இருப்பினும் கடந்த தேர்தல் களைப் போல அல்லாமல் இம்முறை கள்ளப்பணப் புழக் கத்தையும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதையும் தடுக்க பல்வேறு முயற்சிகளை தமிழகத் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. அந்த நடவடிக்கைகளுக்குத் துணையாக போலிசாரையும் வருமான வரித்துறை அதிகாரி களையும் இணைத்துள்ளது ஆணையம். தமிழகம் முழுவதும் பறக்கும் படை மூலம் வாகன சோதனைகள் ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும் சென்னையில் கண் காணிப்பு நடவடிக்கை இதுவரை இல்லாத அளவுக்குப் பலப் படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அமைச்சர்கள், முன் னணி அரசியல் தலைவர்கள், இந்த இரு பிரிவினரின் பினாமி கள் ஆகியோரின் வீடுகளைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கள்ளப் பணத்தை அனுப்பி வைக்கும் வேலைகள் சென்னையில் நடை பெறுவதாக ரகசியப் புலனாய்வுத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வாகனச் சோதனை ஒன்றில் கைப்பற்றப்பட்ட பணம். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!