30,000 வெள்ளி ரொக்கம் உரியவரிடம் வந்து சேர்ந்தது

முஹம்மது ஃபைரோஸ்

பதற்றமும் நம்பிக்கையின்மையும் நிறைந்திருந்த நாணய மாற்று வணிகர் திரு முஹம்மது ரஃபிக்கின் மனநிலை இரண்டே மணி நேரத்தில் நிம்மதியும் நன்றி உணர்வும் மிக்கதாக மாறியது. இந்தத் திருப்பத்திற்கு அவர் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் டோனி வாங்கிற்கு நன்றி செலுத்துகிறார். திரு ரஃபிக்கின் ஊழியர் $30,000 ரொக்கத்தைத் தொலைத் திருந்தார். அப்பணத்தை மறுபடியும் பார்க்க முடியாமல் போய்விடுமோ என்று திரு ரஃபிக் பெரும் கவலை அடைந்தார்.

திரு வாங் $1,000 நோட்டுகளை உள்ளடக்கிய உறையைக் கண் டறிந்து அதை போலிசாரிடம் ஒப் படைத்தது குறித்து பிறகு திரு ரஃபிக்கிற்கு தெரிய வந்தது. "அவர் இவ்வளவு நேர்மையாக இருந்ததைப் பார்க்கும்போது எனக்கு சொல்வதற்கு வார்த்தை களே இல்லை," என்று ராஃபிள்ஸ் சிட்டி கடைத்தொகுதியில் நாணய மாற்று வணிகம் புரியும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிறது. கடந்த டிசம்பர் 29ஆம் தேதியன்று பிற்பகல் வேளையில் திரு ரஃபிக் கின் 73 வயது ஊழியர் ஒருவர் உடற்குறையுள்ளோர் பயன் படுத்தும் பொதுக் கழிவறையில் ஞாபக மறதியினால் ரொக்கத்தைக் கொண்ட உறையை அப்படியே வைத்துவிட்டு கிளம்பிவிட்டார்.

மாணவர் டோனி வாங்குக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் $500 ரொக்கம் வழங்கிய திரு முஹம்மது ரஃபிக். படம்: ‌ஷின்மின்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!