தானியக்க வங்கி இயந்திரங்களில் தமிழ்

டிபிஎஸ், பிஓஎஸ்பி வங்கி அதன் தானியக்க வங்கி இயந்திரங் களில் தமிழ்மொழித் தெரிவுகளை (படம்) வழங்குகின்றது. ஆங்கிலம், சீனம், மலாய் ஆகிய மொழிகளுடன் சிங்கப்பூரில் உள்ள தானியக்க வங்கி இயந் திரங்களில் தமிழ்த் தெரிவையும் வழங்கும் முதல் வங்கி என்ற பெருமை டிபிஎஸ், பிஓஎஸ்பி வங்கியைச் சேரும். இந்தப் புதிய ஏற்பாடு இவ்வங்கியின் தானியக்க வங்கி இயந்திரங்களின் தீவு முழுவதிலு மான மறுசீரமைப்புத் திட்டத்தில் அடங்கும். ஏறத்தாழ 1,1-0--0 தானியக்க வங்கி இயந்திரங்களில் தமிழ் மொழித் தெரிவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த ஏற்பாடு வரும் ஜூன் மாதத்துக்குள் முழுமையடைந்து விடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இதுமட்டுமல்லாது, முதியவர் களுக்குப் பெரிதும் பயன் தரும் வகையில் தானியக்க வங்கி இயந்திரங்களின் திரையில் காணப்படும் சொற்களும் எண் களும் பெரிதாக்கப்பட்டுள்ளன. அதிகமாக செய்யப்படும் பரிவர்த் தனைகள் பிரதான தெரிவுகளில் சேர்க்கப்படும். கூடுதல் ரொக்க அளவு தெரிவுகளும் வழங்கப்படும். புதிய மாற்றங்களினால் பரிவர்த்தனை நேரம் 20 விழுக்காடு வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் டிபிஎஸ், பிஓஎஸ்பி வங்கியின் தானியக்க வங்கி இயந்திரங் களில் அறிமுகப்படுத்தப்படும் முக்கிய மாற்றங்கள் இவையாகும். சமூகத் தலைவர்கள் ஆலோசனை, வாடிக்கையாளர் கள் கருத்து முதலியவற்றைப் பயன்படுத்தி மாற்றங்கள் செய் யப்பட்டுள்ளதாக வங்கி கூறியது.

தானியக்க வங்கி இயந்திரங்களுக்குள் புகுத்தப்படும் தமிழ் தெரிவுகளை மறுஆய்வு செய்யவும் சரிபார்க்கவும் தமிழ் முரசு நாளிதழ், சிங்கப்பூர் தமிழ் சமுதாயம், தமிழ் மொழி மற்றும் கலாசார மன்றம், மொழி நிபுணர்களுடன் கிட்டத்தட்ட 150 மணி நேரம் செலவழிக்கப் பட்டதாக வங்கி தெரிவித்தது. வழங்கப்படும் தமிழ்த் தெரிவுகள் துல்லியமாக இருப்ப தையும் வாடிக்கையாளர்கள் சுலபமாகப் புரிந்துகொண்டு பயன்படுத்தக் கூடிய வகையில் இருப்பதையும் உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது என்று வங்கி குறிப் பிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!