முன்னாள் துணைப் பிரதமர் முக ஜாடையைப் பயன்படுத்தி மோசடி

முன்னாள் துணைப் பிரதமர் வோங் கான் செங்கின் சகோதரர் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட ஆடவர், கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர் களின் நம்பிக்கையைப் பெற்று அவர்களிடமிருந்து 420,000 வெள்ளி மோசடி செய்ததாக நம்பப்படுகிறது. 2007ஆம் ஆண்டில் கட்டுமான நிறுவனம் ஒன்றின் மூன்று பங்குதாரர்களையும் இயக்குநர்களையும் 64 வயது வோங் கோக் கியோங் (படம்) சந்தித்தார். வோங்கின் முக ஜாடை முன்னாள் துணைப் பிரதமரைப் போல இருந்ததால் அவரது சகோதரரா என்று கேட்டதற்கு ஆமாம் என்று அவர் பதிலளித்தார்.

தம்மை முழுமையாக நம்பிய இயக்குநர்களை யுங் ஹோ சாலையில் உள்ள நிலத்தில் வோங் முதலீடு செய்ய வைத் ததாகக் கூறப்படுகிறது. இதற்கு முன் பணமாக 180,000 வெள்ளி யை அவர்களிடமிருந்து வோங் பெற்றுக் கொண்டதாக தெரி விக்கப்பட்டது. குறிப்பிட்ட பங்குகளின் விலை உயரும் என்று நிறுவனத்தின் இ-யக்குநர் களை நம்பவைத்த வோங், ஒரு மாதம் கழித்து அவர்களிட மிருந்து மேலும் 240,000 வெள்ளி பெற்றுக் கொண்டதாக நம்பப்படு கிறது. கொடுக் கப்பட்ட பணத்துக்கான ஆவணங் களை இயக்குநர்கள் கேட்டபோது வோங்கால் அவற்றைத் தர முடியவில்லை. முதலீடுகள் நட்டமாகிவிட்டன என்று 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வோங் இயக்குநர் களிடம் தெரிவித்து பணத்தைத் திரும்பக் கொடுத்துவிடுவதாக வாக்குறுதி அளித்ததாகக் கூறப் படுகிறது.

இந்நாள் வரை வோங் இயக்குநர்களிடம் 195,000 வெள்ளியைத் திருப்பிக் கொடுத் துள்ளார். தம்மீது சுமத்தப்பட்ட இரண்டு மோசடிக் குற்றச் சாட்டுகளை வோங் ஒப்புக் கொண்டார். இந்த வழக்குக்கான தீர்ப்பு அடுத்த மாதம் 26ஆம் தேதி விதிக்கப்படும் என்று நம்பப்படு கிறது. மோசடிக் குற்றம் நிரூபிக்கப் பட்டால் வோங்குக்கு ஏழாண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!