இரவில் மிளிரும் சிங்கப்பூர் - விண்வெளி நிலையத்தில் இருந்து ஓர் அபூர்வமான படம்

இரவு நேரத்தில் சிங்கப்பூரை ஆகாயத்திலிருந்து பார்த்தால் இப்படித்தான் இருக்கும். ஆகாயத்தில் சுற்றிவரும் அனைத்துலக விண்வெளி நிலையத்தின் இப் போதைய தளபதியாக இருப்பவர் டீம் கோப்ரா என்ற அமெரிக்க விண்வெளி வீரர். இவர் அனைத்துலக விண் வெளி நிலையத்திலிருந்து சிங்கப் பூரை இரவு நேரத்தில் படம் எடுத்து அந்தப் படத்தை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டிருக் கிறார். (மேல்படம்). இந்தப் படத்தை டுவிட்டரில் 980 தடவை பார்த்திருக்கிறார்கள். 2,400 பேர் தங்களை அது கவர்ந் திருப்பதாக தெரிவித்திருக் கிறார்கள். சிங்கப்பூரின் இரவு நேரப் படம் அட்டகாசமாக இருக்கிறது.

மஞ்சள் நிற விளக்குகள் பின்னிப்பிணைந்து ஒன்றோடு ஒன்று இணைந்து பிரம்மாண்ட மான ஒரு கட்டமைப்பாக இந்தப் படத்தில் சிங்கப்பூர் காணப்படு கிறது. மத்திய நீர்த்தேக்க காட் டுப் பகுதி இருண்டு காணப்படு கிறது. அமெரிக்க விண்வெளி வீர ரான டீம் கோப்ராவுக்கு வயது 52. அவர் சென்ற ஆண்டு டிசம்பரில் அனைத்துலக விண்வெளி நிலை யத்தின் தளபதியாகப் பொறுப்பு எடுத்துக்கொண்டார். புதுடெல்லி, பெய்ஜிங், நியூயார்க், துபாய் ஆகிய நகரங்களை இரவு நேரத்தில் காட்டும் படங் களையும் அவர் டுவிட்டரில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். கலிபோர்னியா, ஹோனலுலு, ரீயோ டீ ஜெனிரோ ஆகிய நகரங் களைப் பகல் நேரத்தில் மேலிருந்து காட்டும் படங்களையும் இவர் அனுப்பி இருக்கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!