கெடா, பெர்லிசில் இன்றும் நாளையும் பள்ளிகள் மூடல்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் வீசும் கடும் அனல்காற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இன்றும் நாளையும் கெடா, பெர்லிஸ் ஆகிய இரு மாநிலங் களில் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களையும் மூடும்படி கல்வி அமைச்சு உத்தர விட்டுள்ளது. கல்வி அமைச்சர் மஹட்சிர் காலிட் இதனை அறிவித்தார். அவ்விரு மாநிலங்களிலும் வெயில் கடுமையாக உள்ளதால் மாணவர்களின் நலன் கருதி அவ்விரு நாட்களில் பள்ளிக்கூடங் களை மூட முடிவெடுக்கப்பட்ட தாகவும் அவர் சொன்னார். அவ்விரு மாநிலங்களிலும் வெப்ப அளவு 37 டிகிரி செல்சியஸ் அளவைத் தாண்டியதை அடுத்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, தேசிய வள=சுற்றுப்புற அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகிய அமைச்சுகள் தெரிவித்த ஆலோசனையின் பேரில் அந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் சொன்னார்.

சுட்டெரிக்கும் வெயிலும் அனல் காற்றும் நீடிக்குமேயானால் பள்ளிக்கூடங்களை தொடர்ந்து சில நாட்களுக்கு மூடுவது குறித்து புதன்கிழமை முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் சொன்னார். மற்ற மாநிலங்களிலும் வெப்ப அளவை கல்வி அமைச்சு தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அந்த நிலவரத்தின் அடிப்படையில் முக்கிய அறிவிப்பு களை தமது அமைச்சு வெளியிடும் என்றும் அவர் கூறினார். வெப்ப அளவு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 39 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தால் அப்பகுதியில் பள்ளிக்கூடங்கள் மூடப்படும் என்றும் அவர் சொன்னார். இவ்வாண்டின் எல்நினோ பாதிப்பு காரணமாக மலேசியாவில் என்றும் இல்லாத அளவுக்கு தற்போது கடுமையான வெப்பம் காணப்படுகிறது. இந்த மோசமான வெப்பநிலை வரும் மே கடைசி அல்லது ஜூன் மாதம் வரை நீடிக்கும் என்று மலேசிய வானிலை மையம் முன்னுரைத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!