ஆணவக் கொலை: கவுசல்யா வாக்குமூலம்

உடுமலை: தலித் இளையர் சங்கர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது மனைவி கவுசல்யா நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது இந்த வாக்குமூலத்தின் பேரில் மேலும் சிலர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த சங்கரும் கவுசல்யாவும் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் 8 மாதங்களில், சங்கர் படுகொலை செய்யப்பட்டார். கடந்த 13ஆம் தேதி உடுமலை பேருந்து நிலையம் அருகே சங்கர், கவுசல்யா சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் இருவரையும் மடக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து, ரத்த வெள்ளத்தில் சரிந்து மாண்டார்.

படுகாயமடைந்த கவுசல்யா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்தக் கொடூர நிகழ்வுக்கு தனது பெற்றோரும் உறவினர்களுமே காரணம் என காவல்துறையிடம் அவர் தெரி வித்தார். இதையடுத்து அவரது தந்தை சின்னசாமி, நீதிமன்றத்தில் சரணடைந்தார். கொலை தொடர் பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சங்கர் வெட்டிக் கொல்லப் பட்டது அப்பகுதியில் இருந்த ரகசிய கண்காணிப்புக் கேமரா வில் பதிவாகியிருந்தது. அது ஊடகங்களில் வெளியானதால் தமிழகம் முழுவதும் இப்படு கொலைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கொலைச் சம்பவம் தொடர்பாக பல்லடம் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலையான கவுசல்யா, நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

இதற்காக பலத்த போலிஸ் பாதுகாப்போடு அவர் பல்லடம் அழைத்து வரப்பட்டார். கவுசல்யா அளித்த வாக்கு மூலத்தின் பேரில் அவரது உறவினர்கள் சிலர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உடுமலை நீதி மன்றத்தில் நேற்று முன்னிலைப் படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே கவுசல்யா தன் கல்வியைத் தொடர உதவி செய்வதாக சில அமைப்புகள் தெரிவித்துள்ளன. அவருக்கு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!