செரீனாவை வீழ்த்தி அஸ்ரென்கா வெற்றி

இண்டியன்வெல்ஸ்: அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் டென்னிஸ் போட்டியின் பெண்கள் இறுதிச்சுற்றில் அஸ்ரென்காவும் செரீனாவும் மோதினர். இதில் 13ஆம் நிலை வீராங்கனையான அஸ்ரென்காவிடம் செரீனா 6-4, 6-4 என்ற செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஆண்கள் இறுதிச்சுற்றில் மிலோஸ் ராவோனிக்வை 6-2, 6-0 என்ற செட்களில் வீழ்த்தி ஜோகோவிச் பட்டம் வென்றார். பட்டம் வென்ற அவர், "ஆண்கள் பிரிவில் பட்டம் வெல்பவருக்கு கொடுக்கப் படும் பரிசுத் தொகை கூடுதலாக வேண்டும்," என்றார். மேலும் அவர், "போட்டியைக் காண வரும் பார்வையாளர்கள், தொலைக்காட்சியில் பார்ப்பவர்கள் போன்ற சிலவற்றின் அடிப்படையில் பரிசுத்தொகையை நிர்ணயிக்கலாம். "ஆண்கள் விளையாடும் போட்டிகளை காண வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகம் என புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதால், ஆண்கள் போட்டிக்கு அதிக பரிசுத் தொகை நிர்ணயிக்கப்படலாம்," என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!