‘முதல் நான்கு நிலைகள் எட்டக்கூடியதே’

ஞாயிற்­றுக்­கிழமை நள்­ளி­ரவு நடை­பெற்ற மேன்­செஸ்டர் சிட்­டி­யுனான ஆட்­டத்­தில் தோல்­வியைத் தழு­வி­யி­ருந்தால் இங்­கி­லீஷ் பிரி­மி­யர் லீக் பட்­டி­ய­லில் முதல் நான்கு நிலை­களுக்­குள் வரும் நம்­பிக்கை கலைந்து போயி­ருக்­கும் என்றும் ஆனால் அந்த ஆட்­டத்­தில் பெற்ற வெற்றி அந்த நம்­பிக்கையை மீண்டும் வலுப்­படுத்­தி­யி­ருக்­கிறது என்றும் மேன்­செஸ்டர் யுனை­டெட்­டின் நிர்வாகி லூயி வான் ஹால் கூறி­யி­ருக்­கிறார். முதல் நான்கு நிலை­களுக்­குள் வரு­வதற்கு "பெரிய வாய்ப்பு" இருப்­ப­தா­க­வும் அவர் சொன்னார். பரம வைரியான மேன்­செஸ்டர் சிட்டியை அதன் சொந்த அரங்­கில் சந்­தித்­தது மேன்­செஸ்டர் யுனைடெட். இளம் நாயகன் மார்க்­கஸ் ரஷ்­ஃ­போர்ட் ஆட்­டத்­தின் ஒரே கோலை லாவ­க­மாக புகுத்­தினார். இந்த வெற்­றி­யின்­மூ­லம் பட்­டி­ய­லில் ஐம்பது புள்­ளி­களு­டன் ஆறாவது நிலையில் உள்ளது மேன்­செஸ்டர் யுனைட்­டட். தோல்வி பெற்­றா­லும் ஒரு புள்ளி அதிகம் பெற்று நான்கா­வது நிலையில் உள்ளது மேன்­செஸ்டர் சிட்டி.

"தோல்வி அடைந்­தி­ருந்தாலோ சமநிலை கண்­டி­ருந்தாலோ முதல் நான்கு குழுக்­களை எட்டிப் பிடிப்­பது சிர­ம­மாக இருந்­தி­ருக்­கும். இப்போது நம் விதி நம் கையில் உள்ளது. எஞ்­சி­யி­ருக்­கும் ஆட்­டங்களில் அதி­க­மான ஆட்­டங்கள் நமது சொந்த அரங்­கில் நடை­பெ­ற­வி­ருக்­கின்றன. எனவே அவற்­றில் வெற்­றியைப் பதிவு செய்வது நமது கடமை," என்றார் வான் ஹால். யுனைடெட் கடை­சி­யாக 2012 டிசம்ப­ரில்­தான் எட்­டி­ஹாட் அரங்­கில் வெற்றி பெற்றது என்பது குறிப்­பி­டத்­தக்­கது. அதுவும் மூன்று நாட்­களுக்கு முன்­னர்­தான் அது யூரேப்பா லீக் ஆட்­டத்­தில் லிவர்­பூ­லி­டம் தோற்­றி­ருந்தது. "முன்னைய ஆட்­டத்­தி­லி­ருந்து மீண்­டு­வர எங்களுக்கு இரண்டு நாட்­கள்­தான் இருந்தன. அந்த மாதி­ரி­யான சூழலில் விளை­யா­டு­வதே சிரமம். அந்தச் சோர்வு எங்கள் ஆட்­டத்­தில் தெரிந்தா­லும் விளை­யாட்­டா­ளர்­கள் மிகச் சிறப்­பா­கவே ஆடினர்," என்று மேலும் விவ­ரித்­தார் வான் ஹால். யூரோப்பா லீக் ஆட்­டத்­தில் வெற்­றி பெற்ற லிவர்­பூல் நேற்றைய ஆட்­டத்­தில் சவுத்­ஹாம்ப்­ட­னி­டம் மூன்­றுக்கு இரண்டு என வீழ்ந்தது. இத்­தனைக்­கும் அது முற்­பா­தி­யில் இரண்டு கோல் முன்னணி வகித்­தது என்பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஞாயிறு நடை­பெற்ற மற்­று­மொரு ஆட்­டத்­தில் லீக் கிண்­ணத்தை வெல்லும் வாய்ப்பு இருப்­ப­தாக நம்பப்­படும் ஸ்பர்ஸ் குழு போர்ன்­மத் குழுவைத் தனது சொந்த அரங்­கில் எதிர்த்து ஆடியது. லெஸ்ட­ருக்­கும் தனக்­கும் இடை­வெ­ளியை அதி­க­மாக்­கிக் கொள்ளக்கூடாது என்ற முனைப்­பு­டன் ஆடிய அது மூன்­றுக்­குப் பூஜ்யம் என்ற வெற்­றியைப் பதிவு செய்து தொடர்ந்து இரண்டா­வது நிலையில் உள்ளது. பட்டியலிலிருந்து இறக்கப்படும் அபாயத்தில் உள்ள நியூகாசலும் சண்டர்லேண்டும் மோதிய ஆட்டத் தில் இரண்டுக்குமே உயிர் வாழ்வுப் போராட்டம் என்றாலும் அவை ஒன்றுக்கு ஒன்று என சமநிலை மட்டுமே காண முடிந்தது.

திறமையான ஆட்டக்காரர்கள் காயமடைந்திருக்கும் வேளையில் முக்கியமான கோல்களைப் போட்டு அசத்தி வரும் இளம் நாயகன் மார்க் கஸ் ரஷ் ஃ போர்ட் கோல் புகுத்திய ஆனந்தத்தில். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!