எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விக்ரம் பிரபு, ஷாமிலி ஜோடி

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிக்கும் படம் 'வீரசிவாஜி'. இதில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஷாமிலி நடிக்கி றார். இவர்களுடன் ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகிபாபு, 'நான் கடவுள்' ராஜேந்திரன், வினோதினி, ஸ்ரீரஞ்சனி உட்பட பலர் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர். விக்ரம் பிரபு, ஷாமிலி முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் என்பதால் ரசிகர்கள், விநியோகஸ்தர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இருவருக்கும் இடையேயான புரிதல் நன்றாக இருந்த தால், காட்சிகள் அனைத்தும் இயல்பாக, யதார்த்தமாக இருப்பதாகக் கூறுகிறார் இயக்குநர் கணேஷ் விநாயக். "இருவரும் பெரிய குடும்பத்தின் கலை வாரிசுகள். சிறு வயதிலேயே இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்துள்ளது. அதனால் எந்தவித தயக்கமும் இன்றி நடித்தனர். இது அதிரடி சண்டைகளும் நகைச்சுவையும் கொண்ட குடும்பப் பொழுதுபோக்குச் சித்திரம். வாடகைக் கார் ஓட்டுநராக இருக்கும் இளைஞனின் வாழ்க்கை யில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களே இப்படத்தின் கதைக்களம்," என்கிறார் கணேஷ் விநாயக்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!