புதிய உயரமான கட்டடம் தஞ்சோங் பகார் செண்டர்

சிங்கப்பூரின் ஆக உயரமான கட்டடம் என்ற பெருமையை தஞ்சோங் பகார் செண்டர் பெற விருக்கிறது. இது, இவ்வாண்டு மத்தியில் தயாராகிவிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரின் ஆக உயரமான கட்டடம் என்ற பெருமையை தஞ்சோங் பகார் கட்டடம் பெறும். மத்திய வர்த்தக வட்டாரத்தில் 290 மீட்டர் உயரத்துடன் தஞ் சோங் பகார் செண்டர் கம்பீரமாக ஓங்கி உயர்ந்து இருக்கும்.

இதற்கு முன்பு யுஓபி பிளாசா ஒன், ராஃபிள்ஸ் பிளேஸ், ரிபப் ளிக் பிளாசா ஆகியவை உயரமான கட்டடங்களாகத் திகழ்ந் தன. இந்த மூன்று கட்டடங்களின் உயரம் 280 மீட்டர். ஒன் ராஃபிள்ஸ் பிளேஸ் 1988ஆம் ஆண்டிலும் யுஒபி பிளாசா ஒன் 1992ஆம் ஆண்டிலும் ரிபப்ளிக் பிளாசா 1995ஆம் ஆண்டிலும் கட்டி முடிக்கப்பட்டது. இந்த மூன்று கட்டடங்களுடன் ஒப்பிடுகையில் புதிய தஞ்சோங் பகார் கட்டடத்தின் உயரம் பத்து மீட்டர் மட்டுமே கூடுதலாகும். உலகின் ஆக உயரமான கட்டடமாக 829.8 மீட்டருடன் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா திகழ்கிறது. அடுத்த இடத்தில் உள்ள தைவானின் தைப்பே 101 கட்டடத்தின் உயரம் 508 மீட்டர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!