கடந்த 10 ஆண்டுகளில் ரூ.70 லட்சம் கோடி ஊழல்: ராமதாஸ்

திண்டிவனம்: தமிழக மக்களை குடிகாரர்களாக மாற்றிய பெருமை திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மட்டுமே உள்ளது என்று பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழகத்தை ஆண்ட அவ்விரு கட்சிகளும் கடந்த 10 ஆண்டு களாக ரூ.70 லட்சம் கோடி வரை ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டினார். ராமதாசின் இந்தப் புதிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இனி மேற்கொள்ள இருக்கும் பிரசாரத்தின் போது இக்குற்றச்சாட்டு தொடர்பாக அவர் விரிவான விளக்கங்களை அளிக்க இருப்பதாகக் கூறப்படு கிறது. "கடந்த 46 ஆண்டுகளாக ஆட்சியாளர்களாக இருந்தவர்கள் மதுக்கடைகளை அதிகளவில் திறந்தனர். இதன் மூலம் மக்களை குடிகாரர்களாக ஆக்கியுள்ளனர்.

"திமுகவும், அதிமுகவும் வாக்குகளுக்கு தேர்தலுக்குத் தேர்தல் விலை நிர்ணயம் செய்கி றார்கள். இதன் மூலம் வாக்கா ளர்களை அடிமையாக வைக்க முயல்கிறார்கள்," என்று ராமதாஸ் சாடினார். இரு கட்சிகளும் தேர்தலுக்கு முன் பணமும் தேர்தலுக்கு பின் தேவையற்ற இலவசமும் கொடுத்து மக்களை அடிமையாக வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் மாநிலங்களில் கர்நா டகா முதலிடத்திலும் தமிழகம் இரண்டாம் இடத்திலும் ஆந்திரா மூன்றாமிடத்திலும் உள்ளது என் றார். "தமிழகத்தில் உள்ள 80 விழுக்காடு கல்லூரி மாணவர்கள் அடுத்த முதல்வராக அன்புமணி வர வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். எனவே இத் தேர்தலில் அன்புமணி வெற்றி பெறுவதென்பது இப்போதே உறுதி செய்யப்பட்டுள்ளது,"என்று ராமதாஸ் மேலும் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!