நாங்களும் விஜயகாந்துடன் பேசுகிறோம்: வைகோ தகவல்

சென்னை: தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் மக்கள் நலக் கூட்டணியினரும் தொடர்ந்து பேசி வருவதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள் ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், மக்கள் நலக் கூட்டணியின் தொகுதிப் பங்கீட் டுக்கான முதற்கட்ட பேச்சு வார்த்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளதாகக் கூறினார். "எங்கள் கூட்டணிக்கு தேமுதிக வரவேண்டும் என்று மீண்டும் அழைப்பு விடுக்கிறோம். தேவைப்பட்டால் விஜயகாந்தை நேரில் சந்தித்துப் பேசுவோம்," என்றார் வைகோ. மக்கள் நலக் கூட்டணியின் தென் மாவட்ட பிரசாரப் பணி களை மார்ச் 28ஆம் தேதி தொடங்க இருப்பதாகக் குறிப் பிட்ட அவர், திமுகவும், அதிமுக வும் வாக்காளர்களுக்கு பணம் அளிக்கத் தயாராகி வருவதாகக் குற்றம்சாட்டினார்.

நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தல் பணபலத்துக் கும் ஜனநாயகத்துக்கும் இடையே யான போட்டியாக உருமாறியுள்ளது என்றார் அவர். இதற்கிடையே செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மக்கள் நலக் கூட்டணியை வலுப்படுத்த விஜயகாந்த் அதில் இணைய வேண்டும் என வலியுறுத்தினார். "எங்கள் கூட்டணியை வலுப் படுத்த விஜயகாந்தும் இணைய வேண்டும் என்று விரும்புகிறோம். கூட்டணிக்கு வருமாறு அவரை நேரில் சந்தித்து விடுத்த அழைப்பு இன்னும் அப்படியேதான் உள்ளது. அவர் நல்ல முடிவுக்கு வர வேண் டும் என வேண்டுகோள் விடுக்கி றோம்," என்றார் திருமாவளவன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!