திருவள்ளூர்: உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் கொண்டு செல்லப்படும் ரொக்கப் பணம், நகைகளைப் பறிமுதல் செய்வது வாடிக்கையாகி உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அம லுக்கு வந்திருப்பதால், பறக்கும் படையினர் இத்தகைய பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள் ளனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பறக்கும் படையினர், ஜி.என்.டி. சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செங்குன்றம் பகுதியில் இருந்து லாரி ஒன்று வந்தது. பறக்கும் படையினரைக் கண்ட தும், லாரி ஓட்டுநர் அதை சில மீட்டர் தூரத்திலேயே நிறுத்திவிட்டு திடீரென ஓட்டம் பிடித்தார்.
அதிர்ச்சி அடைந்த பறக்கும் படை போலிசார் சுதாரித்துக் கொண்டு, ஓட்டுநரை விரட்டிப் பிடித்தனர். சரவணன் என்ற அந்த நபரிடம் இருந்த ரூ.13 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர். தனியார் நிறுவனம் ஒன்றில் இரும்புக் கழிவுகள் விற்றுக் கிடைத்த பணத்தை நெமிலிச்சேரி யில் உள்ள லாரியின் உரிமை யாளரிடம் அளிக்க எடுத்துச் சென்றதாக அவர் தெரிவித்தார். எனினும் உரிய ஆவணங்கள் இல் லாததால், அந்தப் பணம் அரசுக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இத்தகைய நடவடிக்கைகள் பொதுமக்களை பாதிக்காத வகை யில் மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணத்தை எண்ணும் பறக்கும் படை அதிகாரிகள். படம்: ஊடகம்