பிரசல்ஸ் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு

பிரசல்ஸ்: பெல்ஜிய தலைநகர் பிரசல்ஸின் விமான நிலையத் தில் நேற்று சக்திவாய்ந்த இரு குண்டுகள் வெடித்ததில் பலர் கொல்லப்பட்டதாகவும் மேலும் பலர் காயமடைந்ததாகவும் அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த குண்டு வெடிப்புகளில் குறைந்தது 28க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகவும் சுமார் 30 பேர் காயம் அடைந்ததாகவும் உள் ளூர் மருத்துவமனைத் தகவல்கள் கூறின. அந்த இரட்டை குண்டு வெடிப்புகளுக்கு என்ன காரணம் என்பது இன்னும் கண்டறியப்பட வில்லை.

அந்த விமான நிலையத்தில் பயணிகள் புறப்படும் பகுதியில் இரு குண்டுகள் வெடித்ததாகவும் பயங்கர வெடிப்பு சத்தம் கேட்டதும் பயணிகள் அலறியடித்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியில் ஓடியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து அப்பகுதி புகை மண் டலமாகக் காட்சி அளித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து அந்த விமான நிலையம் மூடப்பட்டது. அந்த விமான நிலையத்திற்கு வரவிருந்த விமானங்கள் திசை திருப்பி விடப் பட்டன. மற்ற அனைத்து விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

வெடிகுண்டு வெடித்ததைத் தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து அலறியடித்துக்கொண்டு வெளியேறும் பயணிகள். படம்: டுவிட்டர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!