அதிமுகவில் சக்திவாய்ந்த ஒரே தலைவர் ஜெயலலிதா. அதையும் மீறி இரண்டாவது இடத்தில்கூட யாரும் வரமுடியாது. இந்த நிலையில் கட்சியில் மறைமுகமாக வலுப்பெற்று ஆட் டம் போட்ட ஐவர் அணி பற்றிய விவரம் அதிமுக தலைமைக்கு தெரிய வந்து அவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டது. அதில் ஐவரும் காணாமல் போனார்கள். இதனால் அதிமுகவில் என்ன நடக்கிறது, மூத்த அமைச்சர் களுக்கு என்ன ஆனது போன்ற கேள்விகளால் தொண்டர்கள் குழம்பத்தில் உள்ளனர். முக்கிய கூட்டங்களிலும் வேட் பாளர் நேர்காணல்களிலும் காண முடியாத அவர்களின் இருப்பிடமும் தெரியவில்லை.
இதற்கிடையே இந்த ஐவர் அணிக்கு முக்கிய சோதனைகளை வைத்து முடிவுரை எழுத தலைவி ஜெயலலிதா வியூகம் வகுத்துள் ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரி விக்கின்றன. இந்த வியூகத்தின்படி அவர் களுடைய அரசியல் வாழ்வு நிர்ணயிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்த லில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கு எதிராக அவர்களை களமிறக்குவதே அதி முக தலைமையின் திட்டம். இதில் அவர்கள் தப்பிப் பிழைத்து வெற்றி பெற்று வந்தால் கட்சியில் இடம். இல்லையென்றால் சொந்த ஊருக்கு மூட்டை கட்ட வேண்டியிருக்கும். இது, அவர்களுக்கு அளிக்கும் கடைசி வாய்ப்பாகவும் கருதப்படு கிறது. மேலும் ஏகப்பட்ட முறை கேடு புகார்களிலும் சிக்கியுள்ள ஐவரின் அரசியல் வாழ்வுக்கு இதன் மூலம் முடிவு கட்டப்படும் என்றும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.