ஐரோப்பிய நாடுகளில் பலத்த பாதுகாப்பு

லண்டன்: பிரசல்ஸ் விமான நிலையத்திலும் மெட்ரோ ரயில் நிலையத்திலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததைத் தொடர்ந்து பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளன. பிரசல்ஸ் குண்டு வெடிப்புகளில் குறைந்தது 28 பேர் உயிரிழந்த தாகவும் 35க்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாகவும் தகவல் கள் கூறின. பெல்ஜியத்தில் பாதுகாப்பு அதிகரித்துள்ள வேளையில் மற்ற நாடுகளிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள் ளது.

பிரிட்டனின் கெட்விக், ஹீத்ரோ விமான நிலையங்களில் பாதுகாப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. பெல்ஜியத்தில் நெரிசல்மிக்க இடங்களைத் தவிர்க்குமாறு பிரிட்டிஷ் குடிமக்களுக்குப் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு ஆலோசனை கூறியுள்ளது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் நேற்று கோப்ரா செயல் குழுவின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கவிருந்தார். பிரான்ஸ் பாதுகாப்பை முடுக்கிவிட்டிருக்கிறது. அதிபர் பிராங்கோஸ் ஹாலண்ட் பெல்ஜியத்தில் நடந்த வெடிப்புச் சம்பவத்தைப் பற்றி கலந்துபேச அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். நெதர்லாந்து விமான நிலையங் களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. செவன்டமில் நடந்த குண்டு வெடிப்புகளில் குறைந்தது ஒரு வெடிப்பு ஸ்டார்பக்ஸ் கடைக்கு அருகில் நடந்ததாகச் சில செய்திகள் கூறுகின்றன. ஆனால் இச்செய்தி உறுதிப் படுத்தப்படவில்லை.

பிரசல்ஸ் விமான நிலைய குண்டு வெடிப்பையடுத்து பயணிகள் முனையத்தில் சிதறிக் கிடக்கும் குப்பைகள். படம்: தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!