அமைச்சரவையில் ஆங் சான் சூச்சிக்கு இடம்

யங்கூன்: மியன்மார் புதிய அமைச்சரவைப் பட்டியலில் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவி ஆங் சான் சூச்சியின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல் கள் கூறுகின்றன. மியன்மார் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டின் கியவ், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 18 அமைச்சர்களில் திருவாட்டி சூச்சியும் ஒருவராவார். யாருக்கு எந்த அமைச்சு என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப் பினும் திருவாட்டி சூச்சி, வெளியுறவு, எரிசக்தி, கல்வி அமைச்சுகளுக்கு பொறுப்பு ஏற்கக்கூடும் என்று கூறப்படுகிறது. புதிய அமைச்சரவையில் அவரைத் தவிர வேறு பெண்கள் யாரும் இடம் பெறவில்லை. மியன்மாரில் கடந்த நவம்பர் மாதம் சூச்சியில் கட்சி அமோக வெற்ற பெற்றதைத் தொடர்ந்து அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!