பார்சிலோனாவை எதிர்கொள்ள ரியால் தயார்

மட்ரிட்: அடுத்த மாதம் 2ஆம் தேதி பரம வைரியான பார்சிலோனாவை அதன் அரங்கில் சந்திக்கிறது ரியால் மட்ரிட். இந்த 'எல் கிளாசிக்கோ' மோதலுக்குத் தயாராக இருக்கிறோம் என்பதை நேற்று முன்தினம் செவிய்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரியால் ஆட்டக்காரர்கள் நிரூபித்துள்ளனர். செவிய்யாவைப் பந்தாடிய ரியால் 4=0 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. ஆட்டம் தொடங்கி ஆறு நிமிடங்களான நிலையில் ரியாலின் முதல் கோல் புகுந்தது. கரிம் பென்சிமா அனுப்பிய பந்து செவிய்யா கோல்காப்பாளரைக் கடந்து சென்று வலையைத் தொட்டது.

இடைவேளையின்போது ரியால் 1=0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பாதியில் ஆட்டத்தைச் சமன் செய்ய வேண்டும் என்று செவிய்யா கொண்டிருந்த கனவு ரியாலின் அதிரடி ஆட்டத்தால் தகர்ந்தது. கோல் மாரி பொழிந்த ரியால் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கேரத் பேல், ஜெசி ரோடிரிகுவேஸ் ஆகியோர் மூலம் மூன்று கோல்கள் போட்டு செவிய்யா ஆட்டக்காரர்களைத் திணறடித்தது. செவிய்யா ஆட்டக்காரர்கள் எவ்வளவு முயன்றும் ரியாலைச் சமாளிக்க முடியாமல் திண்டாடினர்.

இந்த வெற்றியின் காரணமாகப் பெருமிதம் அடைந்த ரியாலின் பயிற்றுவிப்பாளர் ஸினடின் ஸிடான் செவிய்யாவுக்கு எதிராக செயல்பட்டதைப் போல ரியால் ஆட்டக்காரர்கள் தொடர்ந்து விளையாடினால் அவர்களால் பல அற்புதமான சாதனைகளைப் படைக்க முடியும் என்று கூறினார். லீக் பட்டியலில் ரியாலைவிட பார்சி லோனா கூடுதலாக 10 புள்ளிகள் பெற்றிருந் தாலும் அக்குழுவைத் தமது ஆட்டக்காரர் களால் தோற்கடிக்க முடியும் என்று ஸிடான் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வில்லாரியால் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது பார்சிலோனா. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கவனச் சிதறலால் வெற்றியைப் பறிகொடுத்த பார்சிலோனா 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது.

செவிய்யா கோல்காப்பாளரைக் கடந்து செல்ல முயற்சி செய்யும் ரியாலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!