நட்சத்திரக் கிரிக்கெட் வழி ரூ.10 கோடி லாபம்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற் குப் புதிய நிர்வாகிகள் தேர்ந் தெடுக்கப்பட்ட பிறகு முதல் பொதுக் குழுக் கூட்டம் சென்னை யில் தலைவர் நாசர் தலைமையில் நடந்தது. இதில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. நடிகர் சங்கத்துக்குப் புதிய இணையதளம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய நடிகர் சங்கக் கட்டடத்தின் மாதிரியும் அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த மாதிரியை நடிகர் சிவகுமார் திறந்து வைத்தார். பின்னர் விஷால் கூறும்போது, புதிதாக கட்டப்பட இருக்கும் கட்டடத்தில் ஆயிரம் பேர் அமரும் படி பிரம்மாண்ட கலையரங்கம் உருவாக இருக்கிறது என்றார். "மேலும், இந்தக் கட்டடத்திற் குள் 900 பேர் அமரும்படியான ஒரு திருமண மண்டபமும் 300 பேர் அமரும்படியான திருமண மண்டபம் ஒன்றையும் கட்ட இருக்கிறோம்.

"இதில், 300 பேர் அமரக்கூடிய திருமண மண்டபத்தை உறுப்பினர் களுக்கு இலவசமாகவும், 900 பேர் அமரக்கூடிய திருமண மண்டபத்தைப் பொதுமக்களுக்கு வாடகைக்கு விடவும் முடிவு செய்துள்ளோம். மேலும், 150 பேர் அமர்ந்து பார்க்கும்படியான பிரிவியூ தியேட்டர் ஒன்றும் இந்த வளாகத்தில் அமைய இருக்கிறது. மேலும், உடற்பயிற்சிக் கூடம், நடனப் பயிற்சிக் கூடம், பேட்மிண் டன் கூடம் உள்ளிட்டவற்றுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 165 கார்கள் நிறுத்துவதற்கான வசதி யும் உள்ளடக்கியுள்ளது.

நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!