2015 வறட்சி ஆண்டு; மழை 1,266 மிமீ.தான்

சிங்கப்பூரில் சென்ற ஆண்டுதான் வரலாற்று முக்கிய வறட்சி ஆண் டாக அமைந்தது. சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் முதன்முதலாக வெளியிட்டுள்ள வருடாந்திர பருவநிலை மதிப் பீட்டு அறிக்கை இவ்வாறு தெரி வித்துள்ளது. கடந்த ஆண்டில் சராசரியாக 28.3 டிகிரிC வெப்பநிலை பதி வானது. இந்த அளவு 1997, 1998ஆம் ஆண்டின் அளவை விட 0.8 டிகிரிC அதிகம் என்று நிலையம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் சென்ற ஆண்டில் எல்லா மாதங்களிலும் வழக்கத் துக்கு மாறாக அதிக வெப்பநிலை நிலவியது.

ஜூலை, அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சாதனை அளவாக மாத வெப்பம் அதிக மாகப் பதிவானது. சிங்கப்பூரில் வெப்ப பருவநிலைப் போக்கு பல ஆண்டு காலமாகவே காணப் பட்டு வந்துள்ளது. 1948 முதல் 2015 வரையில் ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக் கும் சராசரியாக 0.25 டிகிரிC வெப்பம் அதிகரித்து வந்துள்ளது. இது, உலகம் வெப்பமடையும் அளவைவிட இரண்டு மடங்கு அதிகம். சிங்கப்பூரில் பகல் பொழுதிலும் இரவிலும் வெப்பம் அதிகமாக இருந்தது. வெப்பம் அதிகமாக இருந்த நாட்களும் இருந்தன. இதற்கு எல்நினோ பருவ நிலையே பெரிதும் காரணம் என நிலையம் குறிப்பிட்டுள்ளது. ஆக அதிக வறட்சி ஆண்டு களில் இரண்டாவது இடத்தை 2015 பிடித்துள்ளது. சென்ற ஆண்டில் 1,266 மிமீ. மழைதான் பெய்தது. 1997ல்தான் ஆகக் குறைவாக மழை பெய்தது. சென்ற ஆண்டில் இரண்டாம் பாதியில் எல்நினோ பருவநிலை காரணமாக வெப்பநிலை கூடி யது என்றும் சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்து உள்ளது.

வெப்பம் அதிகரித்ததன் காரணமாக கடற்கரையை நாடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்தது. கோப்புப்படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!