சுற்றுச்சூழலைப் பேணிக்காக்கத் திரண்ட இளையர்

நித்திஷ் செந்தூர்

சிங்கப்­­­பூ­­­ரின் முதல் பிர­­­த­­­ம­­­ரான அமரர் லீ குவான் இயூ, பசுமை­யான, தூய்மை­­­யான சிங்கப்­­­பூரை உரு­­­வாக்­­­க மேற் கொண்ட நடவடிக்கைகளின் தாக்கம் இளை­யர்­களின் மன ­தி­லும் வேரூன்­றி­யுள்ளது. அதனை வெளிப்­படுத்­தும் வண்­­­ணம் 300க்கும் மேற்­­­பட்ட இளை­­­யர்­­­கள் இம்­­­மா­­­தம் 5ஆம் தேதி­­­ புலாவ் உபின், கோனி தீவு­­­களில் சுற்­­­றுச்­சூ­ழல் பாது­­­காப்பு நட­­­வ­­­டிக்கை­­­களில் ஈடு­­­பட்­­­ட­­­னர். தேசிய இளையர் மன்ற­­­மும் 'அவுட்­­­வேர்ட் பவுண்ட் சிங்கப்­­­பூர்' அமைப்­­­பும் இணைந்து இந்த­ நட­­­வ­­­டிக்கைகளுக்கு ஏற்பாடு செய்­­­தி­­­ருந்தன.

கரை­யோ­ரப் பகு­­­தி­­­களை­­­யும் சதுப்பு நிலங்களை­­­யும் சுத்தம் செய்தல், வனங்களை மறுஉரு­­­வாக்­­­கம் செய்தல், கரை­­­யோ­­­ரத்­­­தில் தடுப்­­­பு­­­களை எழுப்­பு­­­தல், தீவுப் பகு­தி­யில் களை­­­யெ­­­டுத்­­­தல், பறவை­­­களுக்­­­கான தங்கும் பெட்­­­டி­­­களைக் கட்­­­டு­­­தல், செய­­­லி­­­களின் வாயிலாக உயி­­­ரி­­­னங்களைப் பற்றிய கருத்­­து சேகரித்தல் போன்ற 6 வெவ்வேறு சுற்­றுச்­ சூ­ழல் நட­­­வ­­­டிக்கை­­­களில் 15 முதல் 35 வய­­­திற்கு உட்­­­பட்ட இளை­­­யர்­­­கள் ஈடு­­­பட்­ட­­­னர். புலாவ் உபின் தீவின் மேற்கு பகு­­­தி­­­யான தாஜாமில் 2014ஆம் ஆண்டில் ஏற்­­­பட்ட காட்டுத் தீக்கு மரங்கள் பல இரை­­­யா­­­கின. மரங்களை அவ்­­­வி­­­டத்­­­தில் மறு­ உ­ரு­­­வாக்­­­கம் செய்யும் பணியில் சுமார் 75 இளை­­­யர்­­­கள் 40 மரக்­­­கன்­­­று­­­களை நட்டு வைத்­­­த­­­னர்.

"நாங்கள் குழு­­­வா­­­கச் செயல்­­­பட்­­­ட­­­தால் மரக்­­­கன்­­­று­­­களை நடும் பணி மிகவும் சுல­­­ப­­­மாக முடிந்தது. சுமார் ஒரு மணி நேரத்­­­திற்­­­குள் 30 மரக்­­­கன்­­­று­­­களை நட்டோம்," என ராஃ­­­பிள்ஸ் தொடக்­­­கக் கல்­­­லூ­­­ரி­­­யில் பயிலும் முகமது சுஃப்­­­யான், 18, தெரி­­­வித்­­­தார். "சுற்­­­றுச்­சூ­ழலைப் பேணிக் காப்பது சமூகப் பொறுப்பு. தொடக்­­­கக் கல்­­­லூ­­­ரி­­­யில் சுற்­­­றுச் ­சூ­­­ழலைப் பற்றிய ஒப்­­­படைப்பு ஒன்றைச் செய்தேன். இதர நாடு­­­களில் சுற்­­­றுச்­­­சூ­­­ழல் எவ்­­­வ­­­ளவு பாதிக்­­­கப்­பட்­­­டுள்­­­ளது என்பதை அறிந்­­­துகொண்டேன். சிங்கப்­­­ பூ­­­ரில் இருப்பது போன்ற தூய்மையான கடற்­­­கரை­­­களையோ சுத்­­­த­­­மான பாதைகளையோ வெளி­நா­டு­களில் காண்பது அரிது. நமது இயற்கை வளங்களைக் கட்­டிக்­காக்க சுற்­றுச்­­­சூ­­­ழ­­­லுக்கு நன்மை பயக்­­­கும் வகையில் தொண்டாற்ற வேண் டும் என்ற எண்ணம் என்னுள் தோன்றியது," என சுஃப்­­­யான் மேலும் கூறினார்.

புலாவ் உபின் தீவில் உள்ள தாவரங்கள், விலங்குகள் பற்றி இளையர்கள் அறிந்துகொண்டனர். (சிவப்பு நிறப் பையுடன்) குனிந்து செடிகளை உற்று நோக்கும் ரி‌ஷி வர்மா. படங்கள்: அவுட்வேர்ட் பவுண்ட் சிங்கப்பூர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!