ஆஸி. பிரதமர்: சீனாவின் நடவடிக்கைகள் எதிர்மறையான விளைவுகளைத் தரும்

சிட்னி: தென்சீனக் கடலில் சீனா வின் ராணுவ நடவடிக்கைகள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறி யுள்ளார். சீனாவின் அணுக்க வர்த்தக பங்காளித்துவ நாடாக இருந்தும் ஆஸ்திரேலியா இவ்வாறான ஒரு கண்டனத்தை வெளியிட்டுள்ள தாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறு கிறது. தென்சீனக் கடற்பகுதியில் பல நாடுகள் அங்குள்ள தீவுகளை சொந்தம் கொண்டாடும் நிலையில் சீனா அங்கு நிலமீட்பு நடவடிக்கை களில் ஈடுபட்டு வந்துள்ளது.

எனினும், கடற்போக்குவரத்து சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்று அமெரிக்கா தலைமையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை களுக்கு ஆஸ்திரேலியா ஆதரவு தெரிவித்து வந்துள்ளது குறிப் பிடத்தக்கது. தென்சீனக் கடற்பகுதியில் சீனா தரையிலிருந்து விண்ணுக் குப் பாயும் ஏவுகணைகளை நிறுத்தி வைத்து தேவையில்லாமல் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. அங்கு ஏவுகணைகள் இருப்ப தாக சீனா இதுவரை உறுதி செய்யவும் இல்லை மறுக்கவும் இல்லை. இந்நிலையில்தான், சிட்னி நகரில் உரையாற்றிய ஆஸ்திரேலி யப் பிரதமர் மால்கம் டர்ன்புல், "அந்தப் பகுதியில் பல நாடுகள் சொந்தம் கொண்டாடிவரும் நிலையில் அந்த நாடுகளின் உரிமை பற்றி நாங்கள் கருத் துரைக்க விரும்பவில்லை என்றா லும், சீனாவின் நடவடிக்கைகள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்," என்று கூறினார்.

திரு டர்ன்புல் அடுத்த மாதம் சீனா செல்லவிருப்பதாக கூறப் படுகிறது. இது ஒருபுறமிருக்க, சீன அர சாங்கம் சென்ற ஆண்டு ஆஸ்திரேலியாவின் தற்காப்பு செலவினம் தொடர்பாக அந் நாட்டுக்கு தனது அதிருப்தியை தெரிவித்தது. அத்துடன், தென் சீனக் கடற்பகுதியில் சுதந்திர கடற்போக்குவரத்தின் அடிப் படையில் அமெரிக்கா மேற் கொண்டுவரும் சுற்றுக்காவல் பணிகள், பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளுடன் ராணுவ கூட்டு நட வடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் தென்சீனக் கடற்பகுதியை ராணுவமயமாக்கி வருவதாக சீன அரசாங்கம் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!