போராளிகள் உருவாகும் இடமாக மாறிய பெல்ஜியம்

பிரசல்ஸ்: சாக்லெட்டுகள், பியர் குடிபானம் போன்றவற்றுக்கு பெயர் பெற்ற பெல்ஜியம் நாடு அண்மைய காலங்களில் ஐரோப்பா வில் போராளிகளை உருவாக்கும் இடமாக மாறிவிட்டதாக கூறப்படு கிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த நவம்பரில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு காரணமானவர் களைத் தேடிய போலிசார் பெல்ஜிய நாட்டின் புறநகர்ப் பகுதியான மொலன்பெக்கில் தங்கள் பார் வையை செலுத்தினர். பெல்ஜிய போலிசாரின் கூற்றுப் படி, இங்குதான் பாரிஸ் தாக்குதல்களுக்குத் திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது.

மொலன்பெக்கிலுள்ள இந்த புறநகர்ப் பகுதியில்தான் அப்டுசலாம் என்பவன் தனது நண்பர்களுடன் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடுவது என்ற எண்ணத்தை கைவிட்டுவிட்டு ஓடி ஒரு வாடகை வீட்டில் ஒளிந் திருந்ததாகவும் நம்பப்படுகிறது. அப்டுசலாம் சென்ற வாரம் கைது செய்யப்பட்ட நிலையில், பெல்ஜியத்தில் உள்ள பயங்கரவாத கட்டமைப்பின் மீது போலிசாரின் பார்வை திரும்பியுள்ளது. லண்டனிலுள்ள தீவிரவாதம் தொடர்பான அனைத்துலக ஆய்வு மேற்கொள்ளும் மையம் ஒன்று 11 மில்லியன் மக்களை மட்டுமே கொண்ட பெல்ஜியம், மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கும் போது சிரியாவில் சண்டையிடும் போராளிகளை அதிகம் கொண்ட நாடாக விளங்குவதாகக் கூறு கிறது. இதன் தொடர்பில் கடந்த 2012ஆம் ஆண்டில் மட்டும் பெல்ஜியத்திலிருந்து ஆண்கள், பெண்கள் என கிட்டத்தட்ட 500 பேர் சிரியாவுக்கும் ஈராக்குக்கும் சென்றுள்ளதாக சிஎன்என் செய் தித் தகவல் கூறுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!