மூன்றாவது சந்தேக நபர் பிடிபட்டார்

பிரசல்ஸ்: பெல்ஜியத் தலைநகர் பிரசல்சில் நடத்தப்பட்ட இரண்டு குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்றா வது சந்தேக நபரான நஜிம் லாச்சருயி நேற்று பிடிபட்டதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக, தற்கொலைத் தாக் குதல்காரர்களாக இருவர் செயல் பட்டுள்ளனர் என்றும் அவர்கள் காலிட் எல் பாக்குரியி, இப்பிரகிம் எல் பாக்குரியி என்ற இரு சகோதரர்கள் என்றும் போலிசார் நம்புகின்றனர். இதைத் தொடர்ந்து பெல்ஜிய போலிசார் பிரசல்ஸ் விமான நிலைய குண்டு வெடிப்புகளுக்கு சற்று முன்னர் இந்த இரு சகோதரர்களுடன் காணப்பட்ட சந்தேக நபரைத் தாங்கள் தற்பொழுது தீவிரமாகத் தேடி வருவதாகக் கூறியிருந்தனர். அந்த சந்தேக நபரின் பெயர் நஜிம் லாச்சருயி என்றும் அவர்கள் அடையாளம் காட்டினர்.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக பெல்ஜியம் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கும் நிலையில், இந்தத் தாக்குதல்களை தாங்கள் நடத்தியதாக ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுக் கொண் டுள்ளது. அதுமட்டுமின்றி இன்னும் அதிக தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அந்த பயங்கரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத் துள்ளது. இந்தத் தாக்குதல்களை நடத்திய காலிட், இப்பிரகிம் சகோ தரர்கள் போலிசாருக்கு தெரிந்தவர் கள் என்றும் இவர்கள் மீது குற்றச் சாட்டுகள் உள்ளன என்றும் செய் தித் தகவல்கள் கூறுகின்றன. காலிட் எல் பாக்குரியி என் பவன் பெல்ஜியத்தின் காட்டுப் பகுதியில் வாடகை வீடு ஒன்றை எடுப்பதற்காக போலியான பெய ரைத் தந்துள்ளான் என்றும் அவன் தங்கிய காட்டுப் பகுதியில் போலி சார் சென்ற வாரம் துப்பாக்கிக் காரன் ஒருவனை சுட்டுக் கொன்ற தாகவும் ஆர்டிபிஎஃப் என்ற செய்தித் தகவல் தெரிவிக்கிறது. அப்பொழுது மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில்தான் சாலா அப்டுசலாம் என்ற சந்தேக நபரின் கைவிரல் பதிவுகள் கண்டெடுக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!