மலேசியா: சட்டத்தை செயல்பட விடாமல் தடுப்பதாக நஜிப் மீது மகாதீர் வழக்கு

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் மீது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது மற்ற இரு முன்னாள் அம்னோ உறுப்பினர்களுடன் சேர்ந்து வழக் குத் தொடுத்துள்ளார். அதில் திரு நஜிப் தமக்கு எதிரான பல்வேறு விசாரணைக ளில் தடை ஏற்படுத்த, அவற்றை திசை திருப்பி தடுக்கும் எண்ணத் துடனும் கெட்ட உள்நோக்கத்துட னும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அதில் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மலேசியாவில் 1எம்டிபி எனப் படும் அரசு நிதியம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரதமர் நஜிப் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். இதில் அவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் அமெரிக்க டாலர் 680மி. (S$926மி.) பணம் போடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள திரு நஜிப், தாம் சொந்த லாபத்துக்காக பணத்தைப் பயன்படுத்தவில்லை என்று கூறி யுள்ளார். இந்த விவகாரத்தில் அவர் எந்தக் குற்றமும் புரிய வில்லை என்று புலன் விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ள நிலையில், டாக்டர் மகாதீர் முகமது சென்ற மாதம் மற்ற பல எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கூட்டுச் சேர்ந்து திரு நஜிப் பதவி விலக வேண்டுமென்று கோரினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!