கிரகணத்திலும் ஒளிர்ந்த பங்குனி உத்திர விழா

வில்சன் சைலஸ்

கண்கவர் வண்ண விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட மூன்றடுக்கு அலகுக் காவடி யைக் கடந்த ஆண்டின் பங் குனி உத்திரத் திருவிழா வின்போது இரவில் ஏந்தினார் 40 வயது திரு வினோத். ஆனால் இவ்வாண்டு காலை யிலேயே காவடியை ஏந்தி தமது நேர்த்திக் கடனைச் செலுத்தி விட்டார் அவர். காரணம் நேற்றைய சந்திரகிரகணம். பிற ஆண்டுகளைப்போல புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக நடை பெற்றாலும் சந்திர கிரகணத்தின் காரணமாக காவடி ஏந்திய பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருந்தது. திரு வினோத்தைப்போல பலரும் தங்கள் நேர்த்திக் கடன் களை மதியத்திற்குள் செலுத்தி விடவேண்டும் என ஆர்வத்துடன் விழாவில் பங்கேற்றனர். "எனக்குத் தெரிந்த உறவினர் வட்டாரத்தில் பலரும் இன்று காவடி ஏந்தவில்லை. அதற்குப் பதிலாக தைப்பூசத்தில் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தி முடித்தனர்," என்று திரு குமார் கூறினார்.

உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளிநாட்டு ஊழியர்கள் பலரும் கிரகணத்தை முன்னிட்டு முன்னதாகவே தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர். சந்திர கிரகணத்தை முன் னிட்டு வழக்கத்தைவிட முன்ன தாக, அதிகாலை 3 மணியளவில் பால் குடங்களை ஏந்தி வர பக்தர்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பொதுவாக பங்குனி உத்திரத் திருவிழா காலை 6 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 12 மணிவரை நடைபெறும். ஆனால் நேற்று மாலை 4.15 மணியுடன் அனைத்து நேர்த்திக் கடன்களும் செலுத்தப்பட வேண்டும் என்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டதால் பெரும் பாலான பக்தர்கள் காலையிலேயே பங்குனி உத்திரத்தில் உற்சாகத் துடன் கலந்துகொண்டனர். வழக்கமாக பங்குனி உத் திரத்தில் நண்பகல்வாக்கில் கலந்து கொள்ளும் திருமதி ஜெயந்தி குடும்பத்தினர் நேற்று அதிகாலை சுமார் 5 மணிக்கெல்லாம் வீட்டி லிருந்து புறப்பட்டுக் கோயிலுக்கு வந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!