அதிர்ச்சியில் உறைந்த ஆர்சனல்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் 21வது வாரத்தில் லெஸ்டர் சிட்டி தவிர்த்து மற்ற எல்லா முன்னணி குழுக்களும் தங்களது ஆட்டங்களில் சமன் கண்டன. பட்டியலின் முதல் நிலையில் இருக்கும் ஆர்சனல், லிவர்பூல் குழுவை அதன் சொந்த அரங்கி லேயே வைத்து வீழ்த்த நல்ல வாய்ப்பு கிட்டியது. ஆனாலும் கடைசி நிமிடத்தில் கோலடித்து லிவர்பூல் குழுவைத் தோல்வியின் பிடியிலிருந்து விடுவித்தார் ஜோ ஆலன்.

லிவர்பூல் தாக்குதல் வரிசையில் பென்டெக்கேவை நீக்கிவிட்டு ஃபிர்மினோவைக் களமிறக்கினார் நிர்வாகி க்ளோப். பத்தாவது நிமி டத்திலேயே கோலடித்து அந்த நம்பிக்கையை மெய்யாக்கினார் ஃபிர்மினோ. ஆர்சனலின் ராம்சி 14ஆம் நிமிடத்தில் பதில் கோலடித்த போதும் அடுத்த ஐந்தாவது நிமி டத்தில் லிவர்பூலை மீண்டும் முன் னிலைக்குக் கொண்டு சென்றார் ஃபிர்மினோ. ஆயினும், 25வது, 55வது நிமி டங்களில் ஜிரூ போட்ட இரு அபார கோல்களால் ஆர்சனல் வெற்றியை நோக்கி முன்னேறியது லிவர்பூல் குழுவின் முதல் கோலை அடிக்கும் பிரேசில் வீரர் ஃபிர்மினோ (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!