பதவி விலகுவதை உறுதி செய்தார் பெர்ன் ஸ்டாங்க

சிங்கப்பூர் காற்­பந்து குழுவின் பயிற்­று­விப்­பா­ளர் பதவி­யில் இருந்து வில­கு­வ­தாக பெர்ன் ஸ்டாங்க கூறி­யுள்­ளார். கடந்த ஒரு வாரமாக சிங்கப்­பூர் காற்­பந்து வட்­டா­ரத்­தில் ஸ்டாங்க­வின் பதவி விலகல் பற்றிய ஊக செய்தி பர­வி­யது. அவற்­றுக்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் விதத்­தில் நேற்று நடந்த செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் தனது பதவி விலகலை உறுதி செய்தார் ஸ்டாங்க. சிங்கப்­பூர் தேசிய காற்­பந்துக் குழுவின் தலைமை பயிற்­று­விப்­பா­ள­ராக இருக்­கும் ஸ்டாங்கவின் பதவிக்­கா­லம் அடுத்த மாதம் முடி­வடை­கிறது. செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் பேசிய அவர், "ஆப்­கா­னிஸ்­தா­னு­டனான போட்­டிக்­குப் பிறகு என்னை வைத்து எதுவும் திட்­ட­மிட வேண்டாம் என சிங்கப்­பூர் காற்­பந்து சங்கத்­தி­டம் கடந்த ஜனவரி மாதம் கேட்டுக் கொண்டேன். "குழுவில் உள்ள விளை­யாட்­டா­ளர்­கள் சிறப்­பாக செயல்­பட வேண்டும் என மிக்க கவ­னத்­து­டன் உள்­ளார்­கள். நான் குழுவை விட்டுச் சென்றா­லும் இது என்னை பெருமை­யடை­யச் செய்­கிறது," என்றார்.

மியன்­மா­ருக்கு எதிரான இன்றைய ஆட்டம் உள்ளூர் ரசி­கர்­களுக்கு விருந்தாக இருக்­குமா எனக் கேட்­ட­போது, "காற்­பந்­தில் நமது செயல்­பாட்டைப் பற்றி யாரும் குறைத்துப் பேசுவதை நான் அனு­ம­திக்­க­ மாட்­டேன். "உலகத் தரவரிசை என்பது கடுமை­யான ஒன்று. நம்­முடைய குழுவில் உள்ள அனை­வ­ரும் உள்ளூர் வீரர்­களே தவிர, வெளி­நாட்டு வீரர்­கள் யாரும் இல்லை என்பதை நாம் மறந்­து­விடக் கூடாது. "இரண்டு ஆட்­டங்களை­யும் வெல்ல வேண்டும் என்­ப­தே நோக்கம். மற்­ற­வற்றை அதன்­ பி­றகு பார்க்­க­லாம்," என்றார் அவர். இன்று இரவு ஜாலான் புசார் அரங்கில் அனைத்துலக நட்புமுறை ஆட்டமொன்றில் மியன்மாரை எதிர்கொள்கிறது சிங்கப்பூர் தேசிய காற்பந்து குழு.

காயம் காரணமாக ஒரு சில ஆட்டங்களில் மட்டுமே விளை யாடிய கைருல் நிஸாம் இன்றைய ஆட்டத்தில் விளையாட உள்ளார். கடந்த பருவத்தில் மலேசிய சூப்பர் லீக் தொடரின் 14 ஆட்டங்களில் விளையாடிய அவர் மூன்று கோல்களைப் புகுத்தினார். தற்போதைய பருவத்தில் எஸ் லீக் தொடரில் நான்கு ஆட்டங்களில் விளையாடிய அவர், மூன்று கோல்களைப் புகுத்தி யுள்ளார். இதன்பிறகு, மார்ச் 29ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சிங்கப்பூர் குழு விளையாடவுள்ள 2018 உலகக் கிண்ண/2019 ஆசியக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டத்திலும் நிஸாம் விளையாடுகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!