"விதிமீறும் அதிமுக - தேர்தல் அதிகாரிகள் அறவே கண்டுகொள்வதில்லை

சென்னை: அதிமுகவினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தொடர்ந்து மீறி வருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இத்தகைய விதிமீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் அதிகாரிகளோ, எதையும் கண்டுகொள்வதில்லை என அவர் புகார் எழுப்பியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையாக கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்தவர்கள்தான் தற்போது தேர்தல் அதிகாரிகளாக உள்ளனர் என்று விமர்சித்துள்ள அவர், அண்மையில் தர்மபுரியில் அதிமுகவினர் நடத்திய நிகழ்ச் சியில் தேர்தல் விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழகத்தின் மற்ற பகுதிகளி லும் இதேபோன்ற விதிமீறல்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருப்பதாகவும், இவற்றைத் தடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சி யர்களும் காவல் கண்காணிப்பாளர்களும் ஆளுங்கட்சிக்கு சாதக மாக ஆதாரங்களைத் திருத்திக் கொண்டிருப்பதாகவும் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். "ஊழல் பணத்திற்கு முறையாக கணக்கு காட்டி ஒப்படைக்காத குற்றத்திற்காக ஆட்சி மேலிடத்தின் கோபத்திற்கு உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் ஆளானதால், அவரது ஆதரவாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய மாவட்ட செயலாளர் நியமிக் கப்பட்டுள்ளார்.

"இதைத் தொடர்ந்து தர்மபுரியி லுள்ள தலைவர்களின் சிலைக்கு புதிய மாவட்டச் செயலாளர் மாலை அணிவித்தபோதுதான் தேர்தல் நடத்தை விதிகள் அப் பட்டமாக மீறப்பட்டன. தலைவர் கள் சிலையை ஒட்டிய பகுதிகளில் ஆளுங்கட்சியினர் வாகனங்களை நிறுத்திவிட்டு கூட்டமாக நின்ற தால் அப்பகுதியில் மிகக் கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டது," என ராமதாஸ் தெரிவித் துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!