பட்ஜெட் 2016: வருமான வரிவிலக்கு உச்சவரம்பு

சொந்த வருமான வரி விலக்கிற்காக ஒருவர் கோரும் மொத்தத் தொகையின் உச்சவரம்பு $80,000 ஆக்கப்படும். எனினும், வரி செலுத்தும் தனிநபர்களில் 99 விழுக்காட்டி னரை இது பாதிக்காது என்றார் அவர். உதாரணத்திற்கு பத்தில் ஒன்பது மாதர்கள் தற்போதுள்ள வேலை செய்யும் தாய்மார்களுக்கான பிள்ளைச் சலுகையை முழுமையாக பெற்றுக்கொள்ளலாம். பிள்ளைப் பெற்ற பிறகும் தொடர்ந்து வேலை செய்யும் மாதர்களுக்கு இந்தச் சலுகை உதவியாக உள்ளது. "தனிப்பட்ட வருமான வரித் திட்டத்தை இந்த உச்சவரம்பு மேலும் முற்போக்கானதாக ஆக்கும்," என்று குறிப்பிட்ட நிதி அமைச்சர், தனிப்பட்ட வருமான வரிச் சுமை இன்னும் குறைவாகவே உள்ளது என்றார்.

சிங்கப்பூரை தொடர்ந்து போட்டித்தன்மை மிக்கதாக திகழச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வரிக் கட்டமைப்பு உள்ளது என்றார் அவர். கணக்கீட்டு ஆண்டு 2018 முதல் நடப்புக்கு வரும் இந்த உச்சவரம்பின் மூலம் கூடுதலாக ஆண்டுக்கு $100 மில்லி யன் வருமான்ம் உயரும் என மதிப்பிடப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!