பட்ஜெட் 2016: மூத்தோருக்கு ஜூலை முதல் உதவித்தொகை

மூத்தோர் ஆதரவுத் திட்டம் அமலுக்கு வரும் என்ற அறிவிப்பு பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களுள் ஒன்று. கீழ்நிலையில் உள்ள 20 விழுக்காடு முதியோருக்கு ஆதரவுக் கரம் நீட்டும் நோக்கில் அமலாகும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் பெரியதொரு முக்கிய அம்சம் இது என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் குறிப்பிட்டு உள்ளார். இத்திட்டத்தின்படி, தகுதி பெறும் மூத்த குடிமக்கள் ஒவ் வொருவரும் வருகிற ஜூலை மாத இறுதியில் தங்களது முதலாவது உதவித் தொகையைப் பெறுவர். அப்போது அவர்கள் இரு காலாண்டிற்கான உதவித் தொகைகளைச் சேர்த்துப் பெறுவர். ஏப்ரல் முதல் ஜூன் வரை மற்றும் ஜூலை முதல் செப்டம்பர் வரை என்ற இரு காலாண்டுக்கான தொகை அவர்களுக்குக் கிடைக்கும்.

இந்த நிரந்தரத் திட்டத்தின் மூலம் 140,000க்கு மேற்பட்ட மூத் தோர் பயனடைவர். இதனால் திட் டம் அமலாகும் முதலாம் ஆண்டில் அரசாங்கத்துக்கு கிட்டத்தட்ட $320 மில்லியன் செலவாகும். தகுதிபெறும் சிங்கப்பூரர்கள் இத்திட்டத்தின்கீழ் தாமாக இணைக்கப்படுவர். அதற்காக அவர்கள் பதிவு செய்துகொள்ளத் தேவை இராது. முதலாவது உதவித் தொகை வழங்கப்படுவதற்கு முன்பாக தகுதிபெறும் முதியோருக்கு அது குறித்த தகவலை மத்திய சேம நிதிக் கழகம் தெரிவிக்கும். மசே நிதிக் கழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வங்கிக் கணக் கில் அத்தொகை வரவு வைக்கப் படும். வங்கிக் கணக்கு வைத்திரா தவர்களுக்கு அவர்கள் பதிவு செய்துள்ள முகவரிக்குக் கா சோலையாக தொகை அனுப்பி வைக்கப்படும். மூத்தோரின் வீட்டின் வகையைப் பொறுத்து அவர்களுக்கான உதவித் தொகை 300 வெள்ளியிலிருந்து 750 வரை கணக்கிடப்படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!