பட்ஜெட் 2016: பிள்ளை மேம்பாட்டு தொடக்க மானியம்

புதிதாக அறிமுகமாகும் தொடக்க மானியத் திட்டத்தின்கீழ் (First Step Grant) நேற்று முதல் பிறக்கும் குழந்தைகளின் பெற் றோர்கள், தங்கள் பிள்ளையின் 'பிள்ளை மேம்பாட்டுக் கணக்கில்' (CDA) $3,000 முன்தொகை பெறுவார்கள். குடும்பத்தை வளர்ப்பதற்கான அருமையான இடமாகத் திகழும் சிங்கப்பூரின் கற்பனை வடி வத்தை எடுத்துரைத்த நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், நாடாளுமன்றத்தில் ஆற்றிய வரவு செலவுத் திட்ட உரையின் போது பிள்ளைகளின் பராமரிப்புக் கான பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்து உரையின் சமுதாயக் கூறுகளை வெளியிட்டார். அவற்றுள் இவை உள்ளடங்கும்:

-பிள்ளை மேம்பாட்டுக் கணக்கு (CDA) தொடக்க மானியம் -ஆதரவு தேவைப்படும் சிறு பிள்ளைகளுக்கான புதிய ‚'கிட் ஸ்டார்ட்' முன்னோட்டத் திட்டம் -வாடகை வீட்டில் பிள்ளை களுடன் வாழும் குடும்பங்களுக் கான ‚'ஃபிரஷ் ஸ்டார்ட்' வீடமைப்பு திட்டம் (புதிய ஆரம்ப வீடமைப்புத் திட்டம்). தொடக்க மானிய திட்டத் தின்கீழ், நேற்று வியாழக்கிழமை முதல் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது பிள்ளை யின் CDA கணக்கில் $3,000 முன்தொகை பெறுவார்கள். குழந்தை போனஸ் திட்டத் தின்கீழ், தங்கள் பிள்ளைகளின் CDA கணக்கில் பெற்றோர்கள் போடும் வைப்புத்தொகைக்கு இணையான தொகையை, ஓர் உச்சவரம்பு வரை, அரசாங்கம் போடுகிறது. இந்தச் சிறப்பு சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்தைக் கொண்டு அங்கீகரிக் கப்பட்ட அமைப்புகளில் குழந்தை பராமரிப்புக் கட்டணம், மருத் துவச் செலவுகள் போன்றவற்றைச் செலுத்தலாம்.

முதல் அல்லது இரண்டாவது பிள்ளைக்கு $6,000 வரையிலும், மூன்றாவது அல்லது நான்காவது பிள்ளைக்கு $12,000 வரையிலும், அதற்கடுத்த பிள்ளைகளுக்கு $18,000 வரையிலும் அரசாங்கம் இணைத் தொகை தருகிறது. சென்ற ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில், 2009 ஜனவரி 1க்கும் 2015 டிசம்பர் 31க்கும் இடையில் பிறந்த குழந்தைகளின் CDA கணக்கில் $300 அல்லது $600 தொகை ஒருமுறை மட்டும் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதற்படி மானியம், மார்ச் 24 முதல் பிறக்கும் தகுதிபெற்ற சிங்கப்பூர் குழந்தைகளுக்கு $3,000 தரும் என்று திரு ஹெங் தெரிவித்தார். இந்தத் தொகையைப் பெறு வதற்குப் பெற்றோர்கள் எந்தத் தொகையும் முதலில் செலுத்தத் தேவையில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!